கொரிய பெண்கள் மேனி மாதிரி கண்ணாடி சருமம் வேணுமா? இந்த ஒரே ஒரு இயற்கை பொருள் போதும்
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் நம் அனைவருக்குமே சரும பராமரிப்பின் மீது மிகப் பெரிய அக்கறை இருக்கவே செய்கிறது.
பலரும் தங்கள் சருமம் கொரியப் பெண்களின் சருமம் போல இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இத்தகைய சருமத்தைப் பெறுவதற்கு அவர்கள் இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இந்த கலவையை நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள்.
ஓட்மீல் மற்றும் தேன் மாஸ்க்
தேவையான பொருட்கள்
- 1 கப் ஓட்ஸ்
- 1 டீஸ்பூன் தேன்
- 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
இதன் மூலம் உருவாகும் கெட்டியான பேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் தடவவும்.
பின் 20 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.
பயன்கள்
ஓட்ஸ் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருப்பதால் சருமத்தில் ஏற்படும் அரிப்பைக் குறைக்கிறது.
தேன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் சருமத்தை ஹைட்ரேட் செய்வதற்கும் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கும் சிறந்ததாகும்.