இளநரை குறித்து கவலையா? விரட்டியடிக்கும் ஐந்து முக்கிய மருத்துவ குறிப்புகள்
பொதுவாக தற்போது இருக்கும் இளம் வயது பிள்ளைகளுக்கு இளநரை ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்சினையால் சிலர் தன்னை வெளியில் இத்தனை வயது தான் என அறிமுப்படுத்திக் கொள்ள வெட்கப்படுகிறார்கள்.
மேலும் இளநரை பிரச்சினை குறித்து சரியாக தெரியாதவர்கள் இதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டார்கள்.
இதனால் காலப்போக்கில் தலைமுழுவதும் நரைத்து முதுமை தோற்றத்திற்கு சென்று விடுகிறார்கள். இளம் நரை பிரச்சினைகள் உடம்பில் போதியளவு ஊட்டசத்துக்கள் இல்லாத காரணத்தால் ஏற்படுகிறது.
அந்த வகையில் இளநரை பிரச்சினைக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
இளநரையை விரட்டும் ஐந்து முக்கியமான குறிப்புகள்
1. இளநரை பிரச்சினை இருப்பவர்கள் சிகைக்காயை நீரில் ஊற வைத்து அதை அரைத்து தலைமுடிக்கு குளிக்கும் முன்னர் போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இளநரையை கட்டுப்படுத்தலாம்.
2. சிலருக்கு அதிகமான மனழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சினை காரணத்தாலும் இளம் வயதில் இளநரை பிரச்சினையிருக்கும் இவ்வாறு இருப்பவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும், அத்துடன் சிறந்த மருத்துவரை நாட வேண்டும். மேலும் 10 மணிக்குள் படுக்கையில் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
3.உடலில் புரதம், முழுதானியன்கள் , கோழி , முட்டை , மீன் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் குறைப்பாடு இருப்பின் இளநரை ஒரு அறிகுறியாக காட்டும் அப்போது இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் கறிவேப்பிலை, எள், நெல்லிக்காய், பாகற்காய், பசு நெய் போன்ற உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4.தேங்காய் எண்ணெயுடன், கற்றாழை ஜெல் கலந்து தலைமுடிக்கு தடவவும். இவ்வாறு செய்வதால் தலையில் இருக்கும் சூடு வெளியேற்றப்படுகிறது.
5. ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, தேங்காய் எண்ணெயுடன் கருப்பாகும் வரை சூடாக்கவும். அதை ஆறவைத்து தலையில் தடவவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் இளநரை பிரச்சினை குறிப்பிட்ட வயது வரை வராமல் பாதுகாக்கலாம்.
மேலும் கறிவேப்பிலையில் இருக்கும் தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், ஆற்றல், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் இளநரை பிரச்சினையை வர விடாமல் தடுக்கிறது.