மருதாணி கைகளில் செக்க சிவப்பாக பிடிக்க வேண்டுமா? இத ஒரு சொட்டு விடுங்க போதும்!
மருதாணியின் மீது அளப்பெரிய காதல் கொண்டவர்கள் பெண்கள் தான்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஆரம்பித்தாலே ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் கைகளில் மருதாணி போடுவதற்கு ஆரம்பித்து விடுவார்கள்.
அதிலும் யாருடைய மருதாணி அதிகமாக சிவக்கிறது? என்ற போட்டிகள் எல்லாம் நடைபெறுவது வழக்கம்.
இப்படி மருதாணி மீது அதீக காதல் கொண்டு சிவப்பாக மருதாணி பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெண்களுக்கு இதோ சில டிப்ஸ்கள்.
மருதாணி சிவப்பாக பிடிப்பதற்கான டிப்ஸ்கள்
சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு
சிவப்பான மருதாணி வேண்டும் என்றால் சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலந்த சாறை மருதாணியின் மீது தடவ வேண்டும்.
இதனால் விரைவில் காய்ந்துவிடாமல் நீண்ட நேரத்திற்கு உங்களது கைகளில் ஒட்டிக்கொள்வதோடு, நல்ல சிவப்பு நிறத்தையும் நமக்கு வழங்குகிறது.
கிராம்பு பயன்படுத்துதல்
மருதாணி கைகளில் இடுவதற்கு முன்னதாக கிராம்பை அந்த பேஸ்டுடன் கலந்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சுமார் 3-4 கிராம்புகளை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவிப்பிடிக்கும் போது நல்ல சிவப்பு நிறம் உங்களுக்கு கிடைக்கும்.
கடுகு எண்ணெய் பயன்படுத்துதல்
கடுகு எண்ணெய்யைக் கொண்டு கைகளில் மருதாணியை நீக்கலாம். இல்லையென்றால் கடுகு எண்ணெய்க்கு பதில் யூகலிப்டஸ் எண்ணெய்யையும் நீங்கள் உபயோகிக்கலாம்.
இதுபோன்று பல நடைமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே நிச்சயம் உங்களது கைகளில் மருதாணி செக்கச் சிவப்பாக நிச்சயம் பிடிக்கும். மருதாணி இடுவது அழகுக்காக மட்டுமில்லாமல் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
மருதாணி இலைகள் தசை இறுக்கத்தைத் தரும் பண்புகளைக் கொண்டுள்ளது.
இரத்த போக்கினைத் தடுத்து மாதவிடாய் பிரச்சனையை சரி செய்வது, கால்களில் பித்த வெடிப்பைத் தடுப்பது, உடல் உஷ்ணத்தை குறைப்பது போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது மருதாணி இலைகள்..