இடுப்பிற்கு கீழ் வரை முடி வளர ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும்: நீங்களே ட்ரை பண்ணி பாருங்க!
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம்.
உருளைக்கிழங்கில் முடியை வேகமாக வளரவைப்பதற்கான சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது பல மடங்காக உங்கள் முடியை வளர வைக்கும் அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வினை ஒரு உருளைக் கிழங்கை வைத்தே நீக்கிவிடலாம் எப்படி தெரியுமா?
செய்முறை
முடிக்கு தேவையான உருளைக்கிழங்கை எடுத்து நன்றாக கழுவி விட்டு பிறகு தோலை சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு உருளைக்கிழங்கை நன்றாக புட்டுத் தேய்புமுறையில் தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சீவிய உருளைக்கிழங்கை அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சுடு இறங்கியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக மா பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பேஸ்ட் போல இருக்கும் இந்த உருளைக்கிழங்கில் வைட்டமின் சீ ஒரு வில்லையை மட்டும் சேர்த்துக் கொண்டால் முடியை வர வைக்கும் ஹேர் பெக் தயார்.
பாவனைமுறை
இந்த ஹேர் பெக்கை தலையை சுற்றி நன்றாக தலையில் மசாஜ் செய்துக் கொள்ளவும்.
20 நிமிடம் தலையில் காயவைத்து சீயக்காய் அல்லது சாம்பூ போட்டு தலையை அலசிக் கொள்ளவும்.
இப்படி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.