3 நாட்களில் பொடுகு முடி முதிர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் இயற்கை வைத்தியம்.. எப்படி பயன்படுத்தலாம்?
இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வும், பொடுகு தொல்லையும், நரைமுடி பிரச்சினையும். இந்த பிரச்சினைகளில் இருந்து இயற்கையாக விடுபட என்னென்ன செய்யவேண்டும் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
தேவையா பொருட்கள்; திரிபலா சூரணம், தயிர், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய். அவ்வளவு தான், இந்த நான்கு பொருட்களை வைத்து தான் இன்று ஹேர் பேக் செய்யப்போகின்றோம். முதலில், ஒரு ஈரம் இல்லாத பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய முடிக்கு தேவையான அளவு திரிபலா சூரணத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து 2 ஸ்பூன் திரிபலா சூரணம், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், வேப்ப எண்ணெய் 1/2 ஸ்பூன், இதை ஒரு பேஸ்ட் போல் தயார் செய்ய தேவையான அளவு தயிரை ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும். பின்னர், உங்கள் மயிர்க்கால்களில் படும்படி இந்த பேஸ்டை நன்றாக அப்ளை செய்யவேண்டும். உங்களது முடியை பகுதி பகுதியாக பிரித்து நன்றாக மண்டையோட்டில் படும்படி தேய்கவேண்டும்.
30 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் பின்பு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்து கொள்ளலாம்.
இவை, வாரத்தில் மூன்று நாட்கள் இதைப் போட்டாலே போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஹேர் பேக் தலையில் போட்டு ஊற வைத்து தலைக்கு குளித்து விடுங்கள். நிச்சயமாக தலையில் இருக்கும் அரிப்பு, பொடுகு, பேன், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது படிப்படியாக குறையத் தொடங்கும்.