சமைக்கும் உணவின் சுவை தாறுமாறாக இருக்க சின்ன சின்ன டிப்ஸ்
அன்றாடம் உணவு சமைக்கும் போது சில உணவுகளில் எந்தெந்த மாற்றங்கள் செய்தால் சுவை அதிகரிக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சின்ன சின்ன சமையல் டிப்ஸ்
உருளைக் கிழங்கை மசித்துச் செய்யும் உணவுகளில் சிறிதளவு ஓமம் கலந்து செய்ய எளிதில் செரிமானமாவதுடன் நல்ல மணத்துடனும் இருக்கும். வாயுத் தொல்லை நீங்கும்.
சோள மாவில் பலகாரம் அல்லது சப்பாத்தி, பூரி செய்யும் போது சிறிதளவு ஓமம் சேர்க்க சுவையும் மணமும் மனதை அள்ளும்.
முட்டை வறுவல் செய்யும் போது அசைவ வாசம் வராமல் இருக்க கொத்தமல்லியைக் கசக்கி, கிளறும்போது சேர்த்தால் வாசம் நீங்கிவிடும்.
புட்டு செய்யும் போது பச்சை வாசம் வராமல் இருக்க, புட்டுக்கு அரிசியை ஊறவைக்கும் முன்பு வாணலியில் லேசாக வறுத்து ஊறவைக்கவும். அல்லது புட்டுக்கு அரைத்த மாவை வாணலியில் வறுத்து வேக வைக்கவும்.
ஜாம், ஊறுகாய், நெய் பாட்டிலின் மூடி டைட்டாக திறக்க முடியாதபடி இருந்தால், மூடியின் விளிம்பில் ஒரு ரப்பர் பாண்டைப் போட்டுவிட்டு, பிறகு திறந்தால் சுலபமாக திறக்க வரும்.
[VEU78