கிடுகிடுன்னு முடி வளரணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. ஆனால், இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் முடி உதிர்வு, இளநரை, வழுக்கை என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதை சரிசெய்ய என்னவெல்லாம் செய்யலாம் எனப் பார்த்தால், அதற்கு இயற்கையான குறிப்புகளும் வைத்தியங்களும் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.
முடி வளர்ச்சியை எவ்வாறு அதிகரிக்கலாம்?
முடிக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமானது. அது உணவாக இருந்தாலும் சரி வீட்டு வைத்தியமாக இருந்தாலும் சரி. சரியான பராமரிப்பு இருந்தால் முடி உதிர்தல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
உச்சந்தலையின் சுத்தத்தை பேணுங்கள்
உச்சந்தலையில் வியர்வை, எண்ணெய் என்பவை இருந்தால் மென்மையான ஷெம்பூ கொண்டு கழுவ வேண்டும். ஏனென்றால் முடி வளர்ச்சிக்கு உச்சந்தலை சுத்தமாக இருக்க வேண்டிய மிகவும் அவசியமாகும்.
மசாஜ் செய்யுங்கள்
உச்சந்தலையில் செய்யும் மசாஜ் முடியின் வேரில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது முடி வளர்ச்சி அதிகரிக்க உதவும்.
ஸ்டைலிங்கை முடியுமானவரை தவிர்த்திடுங்கள்
ஸ்டைல் என்கின்ற பெயரில் முடிக்கு செலுத்தப்படும் அதிகப்படியான வெப்பமானது முடியை வறண்டதாகவும் உடையக்கூடியதாகவும் மாற்றும். எனவே முடியுமானவரை ஸ்டைலிங் செய்வதை தவிருங்கள்.
வெந்தயம்
முடி வளர்ச்சிக்கு வெந்தயமானது சிறந்த தீர்வைக் கொடுக்கும்.
வெங்காயச் சாறு
வெங்காயத்தில் உள்ள சல்பேட் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே வெங்காயச் சாற்றை தொடர்ச்சியாக முடியில் செலுத்தும் பட்சத்தில் முடி நீளமாக வளரும்.
கற்றாழை
இது உச்சந்தலையில் ஏற்படும் அழற்சிக்கு எதிராக போராடி பொடுகுத் தொல்லையிலிருந்தும் விடுபட உதவுகிறது.