சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சொட்டையாக தான் இருப்பார்களாம்..! காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதற்கு பின்னால் பல பிரச்சினைகள் வந்து விடும்.
குறிப்பாக நீரழிவு நோயுள்ளவர்களுக்கு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என மருந்துவர்கள் கூறுகிறார்கள்.
ஏனெனின் நீரிழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தலைவலி மற்றும் மயக்கம் ஆகிய பிரச்சினைகள் கூட வரக்கூடும்.
அந்தவகையில் நீரழிவு நோயுள்ளவர்களுக்கு தலைமுடி பிரச்சினை இருக்குமா? என பலருக்கும் சந்தேகங்கள் இருக்கலாம் இது குறித்து தெளிவாக பார்க்கலாம்.
சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு தலைமுடி உதிருமா?
பொதுவாக சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கண்டிப்பாக முடி உதிர்வு ஏற்படும்.
மேலும் சர்க்கரை வியாதி நோயாளர்களின் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக ரத்த ஓட்டம் தடைபடும் இந்த செயன்முறை காரணமாகவும் முடி உதிர்தல் ஏற்படும்.
அலர்ஜி பிரச்சினையுள்ளவர்களுக்கு சர்க்கரை வியாதியும் சேர்ந்திருந்தால் முடியின் வேர்கள் சேதமாகி தலையிலுள்ள முடிகளை உதிர வைக்கும்.
இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் என்றால் சர்க்கரையின் அளவை கட்டுகோப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். உணவினால் கட்டுபடுத்த முடியாது என்ற ஒன்று இல்லை.