உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும் முக்கியமான காரணங்கள் என்னென்ன தெரியுமா?
பலருக்கும் சிறுநீரக பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமான காரணங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
அதிக இனிப்பு பொருட்களை உட்கொள்வதால் அவை உங்கள் உடலில் சோடியம் மற்றும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, உங்கள் உடலில் இருக்கும் சோடியம் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது, இதன் காரணமாக சிறுநீரகங்களுக்கு வடிகட்டுவதில் சிக்கல் ஏற்பட்டு உங்கள் சிறுநீரகம் செயலிழக்க வழிவகுக்கிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, அளவுக்கு அதிகமாக நீங்கள் சாப்பிடும் காரணத்தாலும், அசைவ பொருட்கள் சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுப்பதாலும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்து உட்கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அதிக அளவு மருந்து மாத்திரை சாப்பிடுவதும் உங்கள் சிறுநீரகம் பாதிப்படைய வழிவகுக்கிறது. சிறுநீரகம் பாதிப்படைய புகைபிடித்தல் மற்றும் அளவுக்கு அதிகமாக மது குடித்தால் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
சிகரெட் மற்றும் பீடியின் புகை உடலை அடையும் போது, அது உடலில் உள்ள நச்சு கூறுகளை அதிகரிக்கத் தொடங்குகிறது.
இதுபோன்ற நச்சுக்களை வட்டிக்காட்டும்போது சிறுநீரகம் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன, இதனால் மெதுவாக சிறுநீரகம் மோசமாகிறது, எனவே நீங்கள் புகைபிடித்தால் அந்த பழக்கத்தை இன்றே கைவிடுங்கள்.