சர்க்கரை நோயாளிகள் தினமும் பாகற்காய் சாப்பிடலாமா?
நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன.
எனவே இவை சாறாகவோ, சாலட்டுகளில் சேர்த்தோ சாப்பிடுவது வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
பல நன்மைகள் இதில் நிறைந்திருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பொதுவாக காணப்படுகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, சர்க்கரையின் அளவு சீராக இருக்க வெந்தயமும் பாகற்காயும் பெரிய அளவில் உதவும்.
ஆனால் அளவுடன் சாப்பிடுவது சிறந்தது, ஏனெனில் ஏற்கனவே மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், பாகற்காயை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு மேலும் குறையலாம்.
எனவே, மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் அளவு மட்டுமே பாகற்காயை உட்கொள்வது நல்லது.