நீரிழிவு நோயுள்ளவர்கள் இந்த காயை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிக்கோங்க!
“நீரிழிவு நோய்” தற்போது பரவலாக மக்களிடம் இருக்கும் நோயாக பார்க்கப்படுகின்றது.
இந்த நோய் பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறு பிள்ளைகளுக்கும் இருக்கின்றது.
மேலும் நீரிழிவு நோயுள்ளவர்கள் நார்ச்சத்து கொண்ட உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து காய்கறிகளில் மிகவும் கசப்பாக இருக்கும் காய்கறி தான் பாகற்காய். இந்த காயில் வைட்டமின் ஏ, சி, பி2, ஈ, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும், பிளாவினாய்ட்ஸ், பாலிபினால் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.
அந்த வகையில் நீரழிவு நோயுள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடலாம் என்ற யோசனை சிலருக்கு இருக்கும்.
பாகற்காய் சாப்பிடலாமா?
1. பாகற்காயில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள் ஆகிய சத்துக்கள் குறைவாக இருக்கின்றது. தொடர்ந்து புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கின்றது. இதனால் நீரழிவு நோயுள்ளவர்கள் தாராளமாக இந்த காயை சாப்பிடலாம்.
2. சரண்டி, விசைன், இன்சுலின் போல் செயல்படும் “பாலிபெப்டைட் - பி” என்ற பதாரத்தம் ரத்த சர்க்கரையை குறைக்கும்.
3. பாகற்காயில் இருக்கும் கசப்புத்தன்மையால் அதிகமாக எடுத்த கொள்ளும் பொழுது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
4. பாகற்காயில் இருக்கும் சில பதார்த்தங்களால் கருப்பை சுருக்குதலை ஏற்படுத்தி கருக்கலைப்பு கூட ஏற்படுத்தும்.
5. லெக்டின் என்ற பதார்த்தம் பாகற்காயில் இருக்கின்றது. இது திசுக்களுக்கு குளுக்கோஸை கொண்டு செல்கின்றது. அத்துடன் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைகிறது.
6. பாகற்காயை அடிக்கடி சாப்பிடுவதால் கல்லீரல் பிரச்சினை ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதனால் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |