20 வருடமாக தீராத தலைவலி! ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
நீண்ட நாட்களாக தலைவலியோடு அவதிப்பட்டவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக தலைவலி இருந்து வந்துள்ளது.
அன்றாட தலைவலி தான் என எண்ணிய அவர் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். ஆனாலும், அதே வலியோடு வாழ்ந்து வந்த அவர், மருத்துவ பரிசோதனைக்கு பின் பெரும் அதிர்ச்சியே காத்திருந்துள்ளது.
எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது மண்டை ஓட்டில் புல்லட் ஒன்று சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், ஆச்சரியம் என்ன என்றால், தனது தலையில் புல்லட் எப்படி வந்தது என்பது குறித்து அவருக்கும் காரணம் தெரியவில்லை.
மேலும், தற்போது 28 வயதாகும் இவருக்கு, 8 வயது இருந்தபோது, தன்னுடைய சகோதரும் தானும் விளையாடிக்கொண்டிருந்தபோது, அப்போது அவர் பயன்படுத்திய ஏர்கன் இந்த புல்லட் பாய்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கிறார்.
இதன்பின்னர் என் சிறிய வயதில் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டது ஞாயகம் இருக்கிறது என்றும், தலை முடியை வைத்து மறைத்து தனது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், இந்த புல்லட் ஆனது சுமார் 0.5 செ.மீ முதல் 1 செ.மீ. அளவு இருந்ததாகவும், இவ்வளவு நாட்களாக இந்த புல்லட்டுடன் எப்படி உயிர் வாழ்ந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இருந்தாலும், புல்லட் மண்டை ஓட்டை தாண்டி உள்ளே இறங்காமல், வெளிப்புறத்திலேயே இருந்ததால், இவருக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லாமல் இருந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளனர்.