இளநரையால் முதிர்ந்த தோற்றத்தை உணர்கிறீர்களா? அப்போ இந்த எண்ணெய்யை ட்ரை பண்ணுங்க
பொதுவாகவே பெண்களுக்கும், ஆண்களுக்கும் முடியை பராமரிப்பது என்பது மிகவும் விருப்பமானதொன்று தான்.
ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வும் நரையும் வந்து அழகையே சிதைத்து விடுகிறது.
நம் முன்னோர்கள் எல்லாம் அப்போது எந்த ஷாம்பும் பயன்படுத்தியது இல்லை, எந்த எண்ணெய்யும் பயன்படுத்தியது இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அழகான முடியைக் கொண்டிருந்தார்கள்.
அதை போல நீங்களும் உங்கள் முடி வளர்ச்சிக்கும், கருமையான முடிக்கும் தினமும் நல்ல இரும்புச் சத்து, புரோட்டீன் அதிகமான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
அதுமட்டுமில்லாது வாரத்தில் இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் அடர்த்தியான மற்றும் கருமையான முடியைப் பெறலாம்.
இந்த முடிப்பிரச்சினைகளுக்கு எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே எண்ணெய் தயாரித்து நரைமுடியை சரி செய்யலாம்.
எண்ணெய் செய்யும் முறை
மருதாணி, வெந்தயம், கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், செம்பருத்தி, கருவேப்பிலை எல்லாவற்றையும் நன்றாக காய வைத்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பொடியா அரைத்து எடுத்துக் கொண்டதில் ஒரு லீட்டர் எண்ணெய்யும், 100 மில்லி அளவிலான நல்லெண்ணெய்யும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
இப்படி நீங்கள் தயாரித்த எண்ணெய்யை தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடியின் நிறம் மாறி அழகாக தோன்றுவீர்கள்.