தலைமுடியை பளபளப்பாக்கும் சீரம்: இனி வீட்டிலேயே தயாரிக்கலாம் எப்படித் தெரியுமா?
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடியை பளபளப்பாக்கும் சீரம் வீட்டிலேயே செய்யலாம்.
கற்றாழை சீரம்
கற்றாழையில் கூந்தலுக்கு தேவையான 100 வீதமான போசாக்குகள் இருக்கிறது. இந்தக் கற்றாழை இறந்த செல்களுக்கு நீக்கி மயிர்கால்களுக்கு போசாக்கு கொடுக்கும். இந்தக் கற்றாழையில் இரண்டு தேக்கரண்டி ஜெல்லை எடுத்து ஒரு தேக்கரண்டி ஜோஜோபா எண்ணெய்யில் கலந்து வேரிலிருந்து நுனி வரை தடவி 30 நிமிடம் ஊறவைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் முடி மென்மையான மாறும்.
தேங்காய் எண்ணெய் சீரம்
தேங்காய் எண்ணெய்யானது சரும பராமரிப்பிலும், கூந்தல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த தேங்காய் எண்ணெய்யில் சம அளவாக பாதாம் எண்ணெய்யைக் கலந்து வெதுவெதுப்பான வெப்பநிலையில் சூடாக்கி தலைமுழுவதும் தடவி ஷாம்பு போட்டு குளித்தால் தலைமுடி பளப்பாக மாறும்.
ஆலிவ் எண்ணெய், முட்டை சீரம்
முட்டையானது தலை முடிக்கு ஈரப்பதனை கொடுத்து நன்று வளர்ச்சியடைய வைக்கும். முட்டையில் இருக்கும் வைட்டமின்களும் சத்துக்களும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். அந்த முட்டையை நன்றாக அடித்து அதில் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலைமுடிக்கி தடவி 30 நிமிடங்களின் பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முடி மென்மையாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |