எலி வால் போல இருக்கும் முடியை ஒரு ரூபாய் கூட செலவின்றி அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்!
நமது அழகில் மிக முக்கிய பங்கு வகிப்பது நமது கூந்தலும் கூட. ஆனால் நாம் வெளியே செல்லும் ஏற்படும் தூசி, காலநிலை மாற்றம், மாசு. வெயில் போன்றவற்றால் நமது சருமம் மட்டும்மல்ல நமது கூந்தலும் பாதிப்படைகிறது. கூந்தல் உதிர்வு, பொடுகு, இளநரை, கூந்தல் வளர்ச்சி, வறண்ட கூந்தல் போன்ற ஏராளமான பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த பிரச்சினைகளையெல்லாம் எதிர்கொள்ளும் ஒரே ஒரு பொருள் தான் கற்றாழை. இந்த கற்றாழையில் கூந்தலுக்கு அத்தியாவசியமான 100 விதமான போஷாக்குகள் அடங்கியுள்ளன. இந்த கற்றாழை ஜெல் நமது கூந்தலுக்கு எந்தெந்த வகைகளில் பயன்படுகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
கற்றாழை பேக் தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் கற்றாழை ஜெல் பயன்படுத்தும் முறை இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தல் அசைந்தாடும்.
நன்மைகள் கற்றாழை ஜெல்லில் புரோட்டியோலைடிக் என்சைம் உள்ளது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலை உடனடியாக பட்டு போன்று மென்மையாக மாற்றி விடும். எனவே உங்கள் கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும்.
இனி எந்த ஹேர் ஸ்டைலையும் நீங்கள் போட்டு அசத்தலாம்.
இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது.
இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சி போன்றவற்றைப் போக்குகிறது.