இப்படி மாவு அரைச்சு பாருங்க - தோசை ஹோட்டல் சுவையில் வரும்
வீட்டில் செய்யும் தோசை மாவில் சில பொருட்களை சேர்த்து அரைக்கும் போது அது நாம் ஹோட்டலில் சாப்பிடும் தோசை போல மிகவும் சுவையாக இருக்கும்.

தோசைக்கு மாவு அரைத்தல்
வீட்டில் நாம் அரை்கும் தோசை ஹோட்டில் சாப்பிடும் தோசை போல வரவில்லை என்று நாம் கவலைப்படுவதுண்டு. இதற்கு பலரும் சமூக வலைத்தளத்தில் டிப்ஸ் தேடி செய்வார்கள். ஆனால் அவை எல்லாம் சிறந்த பலனை தராது.
நாம் தோசை மாவு அரைக்க பயன்படுத்தும் தானியங்களில் இருந்து அதை ஊற வைக்கும் முறை வரைக்கும் நாம் கவனமாக இருப்பது அவசியம். அதை சரிவர செய்தால் ஹோட்டல் சுவையில் தோசை கிடைக்கும்.
டிப்ஸ்
மாவு அரைக்கும் போது நாம் செய்யும் சிறிய மாற்றம் தான் தோசையின் சுவையை அதிகமாக்கும்.
நாம் இட்லி தோசை வடை என எதை செய்கிறோமோ அதற்கு நாம் தோலில்லாத உழுந்தை தான் தெரிவு செய்ய வேண்டும்.
ஒருவேளை நீங்கள் தோலுள்ள உழுந்து வாங்கினால் அதில் 80% தோலை நீக்கிய பின்னர் தான் நிங்கள் பயன்படுத்த வேண்டும். வடை செய்வதென்றால் 50% தோல் நீக்கலாம். இப்படி எடுத்துக்கொண்ட உழுந்து பருப்பை 3 அல்லது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பண்டைய காலங்களில் பருப்பு விரைவில் ஊறி வர அதில் இரும்பு துண்டு ஒன்று போடுவார்கள். அதை நீங்களும் பின்பற்றலாம்.
இட்லிக்கு ஒரு கப் உளுந்துக்கு, இரண்டரை கப் ரவை அல்லது அரிசி பயன்படுத்தலாம். ரவையை நேரடியாக மாவில் போடுவது நல்லது. அதை தண்ணீரில் போட்டு ஊற விட கூடாது.

தோசை மற்றும் இட்லிக்கு மாவு அரைக்கும் போது மிக்ஸியில் மாவு சூடாகாமல் இருக்க ஐஸ் வாட்டர் அல்லர் ஐஸ் கட்டிகளை போட்டு மாவு அரைத்தல் நல்லது.
இதனால் மாவு சீக்கிரம் கெட்டு போகாது. அரைத்த உடனே மாவை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. அரைத்த மாவை சில மணி நேரத்திற்கு வெளியில் வைத்து அந்த மாவு புளித்தவுடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் இட்லி பூப்போலவும் சுவையாகவும் வரும்.
தோசை மாவு அரைக்க ஒரு கப் உளுந்துக்கு மூன்று கப் அரிசி சரியான அளவு. தோசை மாவில் கொஞ்சம் வெந்தயம், அவல் அல்லது கடலைப் பருப்பு சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.

அதிலும் கடலைப் பருப்பு சேர்க்கும்போது, தோசைக்கு ஹோட்டல்களில் கிடைக்கும் தோசை போல அழகான நிறத்தை கொடுக்கும். தோசை மாவில் ஒருபோதும் சாதம் கலக்க கூடாது.
இது உடல் உபாதைகளை கொண்டு வரும். ஆப்ப சோடா யூஸ் பண்ண கூடாது. இது எலும்புகளை பலவீனமாக்கும். இயற்கையா மாவு புளிப்பது தான் ஆரோக்கியம்.
மாவை 2-3 நாளைக்கு மேல் வைத்து பயன்படுத்த கூடாது. தோசை மாவு அரைக்கும்போது, கொஞ்சம் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்தால் தோசையின் சுவை அதிகமாகும். இதுபோல தோசை மற்றும் இட்லிக்கு மாவு அரைத்தால் ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவை கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |