புற்றுநோய்யை எதிர்க்கும் பச்சை மிளகாய் தொக்கு
நமது சமையலறையில் உள்ள காய்கறிகள் பச்சை மிளகாய் இல்லாமல் இருக்காது.
குழம்புகள், பொரியல் என அனைத்திலும் வெங்காயத்துடன் பச்சை மிளகாய் ஒன்று கட்டாயம் தாளிப்புக்கு சேர்ப்பார்கள். அப்படி சேர்க்கப்படும் பச்சை மிளகாயில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட பலன்கள் உள்ளன.
உதாரணமாக சருமம், செரிமானம், சளி, இருமல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு பச்சை மிளகாய் தீர்வு கொடுக்கிறது. அத்துடன் வைட்டமின் சி, ஈ, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
தினமும் இரண்டு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இவ்வளவு சிறப்புக்களை தன்வசம் வைத்திருக்கும் பச்சை மிளகாயை வைத்து எப்படி இலகுவாக தொக்கு செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- பச்சை மிளகாய்- 15
- சின்ன வெங்காயம்- 12
- புளி- எலுமிச்சை அளவு
- இஞ்சி- சிறிய துண்டு
- கடுகு- கால் டீஸ்பூன்
- வெந்தயம்- கால் டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- கால் டீஸ்பூன்
- கடலைப்பருப்பு- கால் டீஸ்பூன்
- நல்லெண்ணெய்
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயம்- சிறிதளவு
- கருவேப்பிலை
- வெல்லம்
தொக்கு எப்படி செய்யலாம்?
முதலில் தொக்கு செய்ய தேவையான பச்சை மிளகாய்களை எடுத்து தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின்னர், காம்புகளை நீக்கி, ஈரம் இல்லாமல் துடைக்கவும். பச்சை மிளகாயை நடுவாக்கில் கத்தியால் கீரி தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அடுத்து, அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

கீரி வைத்திருக்கும் பச்சை மிளகாய்களை போட்டு வதக்கி, விட்டு இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பெருங்காயம் சிறிதளவு, மஞ்சள், நறுக்கிய சின்ன வெங்காயம் ஒவ்வொன்றையும் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி எடுக்கவும். பச்சை வாடை போனதும் அதில் புளி கரைசல் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கடைசியாக, சிறிதளவு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கினால் பச்சை மிளகாய் தொக்கு தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |