அலுவலக காதல் அதிகமாக இருக்கும் நாடு எது தெரியுமா?
தற்போது இருக்கும் நவீனமயமாக்கலினால் அலுவலகம் சென்று வேலைப் பார்க்கும் கலாச்சாரமாகி விட்டது.
வீட்டில் இருந்து வேலைப் பார்ப்பவர்களை விட அலுவலகம் சென்று வேலைப் பார்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக படிப்பை முடித்த இளைஞர்கள் பெரும்பாலும் அலுவலகம் சென்று தான் வேலை பார்க்கிறார்கள். அப்படி அலுவலகம் செல்லும் பொழுது அங்கு காதல், சண்டை, நட்பு ஆகிய பழக்கங்கள் வருவது இயல்பான விடயம்.
உலக நாடுகளில் அலுவலகத்தில் காதல் கொள்ளும் இளைஞர்கள் வாழும் நாடுகளின் பட்டியலை எடுத்துப் பார்த்த பொழுது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று சிக்கியுள்ளது.
அதாவது, அலுவலகத்தில் காதல் கொள்பவர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. காதல் ஜோடிகள் இல்லாத அலுவலகங்களே இங்கு இல்லை என குறித்த தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

அலுவலக காதல் அதிகமாக உள்ள நாடு
அலுவலகங்களில் காதல் பற்றிய ஆய்வில் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, மெக்ஸிகோ, ஸ்பெயின், ஸ்விட்சர்லேண்ட், UK மற்றும் US உட்பட 11 நாடுகள் பங்கேற்று உள்ளன.
வேலைப் பார்க்கும் அலுவலகங்களில் காதல்வயப்படும் ஜோடிகள் அதிகமாக இருக்கும் நாடு மெக்சிகோ. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள அலுவலங்களில் இதற்காகவே விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டாலும், அலுவலக காதல் இந்தியாவில் அதிக அளவில் நிலவி வருகிறது.

வேலைச் செய்யும் இடங்களில் 10 இந்தியர்களில் 4 நபர்கள் டேட்டிங் செய்வார்கள். டேட்டிங்கில் இருப்பது கலாச்சாரமாகியும் வருகிறது.
முதல் இடத்தில் இருக்கும் மெக்சிகோவில் வேலைச் செய்பவர்களில் 43 சதவீத நபர்கள் உடன் பணிபுரிபவர்களோடு உறவில் இருக்கிறார்கள். அதே சமயம் இந்தியாவில் 40 சதவீதமானவர்கள் உறவில் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடங்களை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் பிடிக்கின்றன.
அலுவலக காதலில் பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். இது தொடர்பான கணக்கெடுப்பில் ஆண்கள் 51 சதவீதமும், பெண்கள் 31 சதவீதமும் கண்டறியப்பட்டுள்ளனர்.

உஷாரான பெண்கள்
1. பெரும்பாலான இடங்களில் பெண்கள், அலுவலகத்தில் இருக்கும் பொழுது தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அதனுடன் இணைக்க விரும்பமாட்டார்கள்.
2. படிப்பு முடிந்தவுடன் அலுவலகங்களில் வேலைக்கு வரும் பெண்கள், காதலிப்பதால் தன்னுடைய இலக்கு வீணாகி விடும் என்ற பயத்தில் அலுவலகங்களில் வரும் காதல் பிரபோஸ்களை தட்டிக்கழிக்கிறார்கள்.

3. தற்போது இருக்கும் தலைமுறையை தன்னுடைய எதிர்காலம் பாதித்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, ஆண்கள் அதிகமாக திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்கள். இது தொடர்பான ஆய்வுகளில், இந்தியாவில் அதிக கள்ளத்தொடர்பு இருக்கும் இடங்களின் பட்டியலில் காஞ்சிபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |