எடையை குறைக்க ஒரு பச்சை மிளகாய் போதுமா? அப்போ கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக இந்திய உணவுகளில் அதிகமான பச்சை மிளகாய் சேர்த்து கொள்வோம்.
இது உணவை காரசாரப்படுத்துதற்கு உதவியாக இருக்கும்.
அத்துடன் இது வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் செலுத்துக்கின்றது என மருத்துவர்கள் ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்த வகையில் பச்சை மிளகாயை சாப்பிடுவதால் அப்படி என்ன என்ன பயன்கள் இருக்கின்றது என தெரிந்து கொள்வோம்.
பச்சை மிளகாய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Image - News18 Tamil
1. சமைக்கும் முன்னர் பச்சையாக இருக்கும் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருக்கின்றது. இது நம்முடைய உடலில் சீரான இதய துடிப்பு, இரத்தயோட்டத்தை சீர்ப்படுத்துகின்றது.
2. அத்துடன் உடலுக்கு அவசியம் தேவையான சிலிகான் சத்து பச்சை மிளகாயில் இருக்கின்றது. இது தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்கிறது.
3. நம்மில் பலர் மருத்துவரிடம் செல்லும் போது இரும்புச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள் என கூறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் இரும்பு சத்து தான் உடலுக்கு சக்தியை கொடுக்கின்றது.
மேலும் பச்சை மிளகாயில் இரும்புசத்து ஏராளம் இருக்கின்றது. ஆகவே உணவுகளில் பச்சை மிளகாய் சேர்ப்பது நன்றாக இருக்கும்.
4. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் கூட பச்சை மிளகாயை தாரளமாக எடுத்து கொள்ளலாம். ஏனெனின் பச்சை மிளகாயில் அதிகம் உள்ள கேப்சைசின் என்ற வேதிப்பொருள் இருக்கின்றது. இது சர்க்கரையின் அளவை குறையாமல் பார்த்து கொள்கின்றது.
5. வளர்சிதைவு மாற்றத்தை ஏற்படுத்தவும் பச்சை மிளகாய் உதவுகின்றது என மருத்துவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். அத்துடன் கொழுப்பை கரைத்து எடையையும் மின்னல் வேகத்தில் குறைக்க உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |