ப்ரெஞ்ச் ப்ரைஸ் அதிகமா எடுத்துக்காதீங்க....ரொம்ப ஆபத்தாம்
உடலுக்கு ஆரோக்கியமானதை உண்பதை விட வாய்க்கு ருசியாக இருப்பதை உண்பதில்தான் அனைவருக்கும் விருப்பம் உண்டு.
அதிலும் குறிப்பாக ப்ரெஞ்ச் ப்ரைஸ் என்று கூறப்படும் வறுத்த உணவுகளை குழந்தைகள் அதிகம் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், இந்த உணவுகள் பதட்டம் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பிரதான உணவாக தாய்மார் கொடுத்தனுப்புவது உருளைக்கிழங்கு வறுவலைத்தான். அதேசமயம் இந்த உருளைக்கிழங்கு வறுவலை பலர் தனது விரும்பிய உணவாக உட்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
image - taste
இன்றைய சூழலில் யாரைப் பார்த்தாலும் ஒருவித மன அழுத்தத்ததுடனும் பதட்டத்துடனுமே காணப்படுகின்றனர். அதற்கு இதுபோன்ற வறுத்த உணவுகளும் முக்கிய காரணம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வறுத்த உணவுகளின் மேலதிக சுவைக்காக ரசாயனங்கள் சேர்க்கப்படும் என்பது பொதுவாக நாம் அனைவரும் அறிந்ததே. அது அதீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
கார்போவைதரேட் அதிகமுள்ள உணவுகளில் ஒன்றான உருளைக்கிழங்கை வறுக்கும்போது அதிலிருந்து அக்ரிலமைட் என்னும் வேதிப்பொருள் வெளியாகின்றது. இது உடல் பருமன், நரம்பியல் கோளாறு, வளர்சிதை மாற்றத்தில் கோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
image - Wikipedia
அதுமாத்திரமில்லாமல் மனச்சோர்வுக்கு இந்த அக்ரிலமைட் என்னும் வேதிப்பொருள் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு வறுத்த உணவுகளுடன் சர்க்கரை பொருட்கள், மதுபானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பவற்றை உட்கொள்வதும் மனச் சோர்வை அதிகரிக்கக்கூடும்.
எனவே இவ்வாறு காபோவைதரேற் அதிகமாக உள்ள உணவுகளை வறுத்து உண்ணாமல் வேக வைத்து மசித்து உண்ணலாம். இதுவே உடலுக்கு நன்மை பயக்கும்.
image - healthyfime