எஸ்கேப் ஆன ஜோடிக்கு தமிழர் முறையில் திருணம்! உக்ரைன் போருக்கு நடுவில் தீயாய் பரவும் காட்சி
உலகத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் மிகவும் மோசமாக பாதித்த உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், இந்தோ-உக்ரேனிய ஜோடிக்கு ஒரு அற்புதமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாதை சேர்ந்த இளைஞனும் உக்ரைனிய பெண்ணும் உக்ரைனில் திருமணம் செய்து கொண்ட பின்னர், அவர்கள் இந்தியாவுக்கு வந்தனர்.
இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
In a Hope for new relationships?#Ukraine bride Lyubov & #Hyderabad groom Prateek
— Naveena Ghanate (@TheNaveena) February 28, 2022
Chilkur Priest @csranga prayed for the war to end while blessing this new relationship!
The couple tied a knot in Ukrain & came to India to host the reception a day before war started pic.twitter.com/bwo3qJHEOZ
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரதீக், பிப்ரவரி 23 அன்று உக்ரைனில் லியுபோவ் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார்.
அதாவது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு ஒரு நாள் முன்பு திருமணம் செய்துக் கொண்ட இந்த ஜோடி, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக இந்தியா வந்தது.
தற்போது வரவேற்பு நிகழ்ச்சியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடக மன்றங்களில் பரவி வருகின்றன.