அம்மா திட்டியதால் 24 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய சிறுவன்! கடைசியில் சென்ற இடம் எது தெரியுமா?
சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாய் திட்டியதால் கோபத்தில் சைக்கிளில் கிளம்பி 22 மணிநேரம் பயணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா திட்டியதால் கோபத்தில் சிறுவன்
பொதுவாக குழந்தைகளுக்கு தனது பெற்றோர்கள் ஏதேனும் சத்தம் போட்டால் உடனே தனது தாத்தா பாட்டியிடம் சென்று தான் அடைக்கலம் தேடுவார்கள். இதே போன்ற சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது.
சீன ஊடகம் ஒன்றில் கடந்த 2ம் தேதி 11 வயது சிறுவன் ஒருவன் சோர்வாகவும், தனியாகவும் சென்றதைக் கண்ட பொலிசார், அவரை தடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக போடப்பட்டுள்ளது.
விசாரணையில் குறித்த சிறுவன் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சோவில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறி சுமார் 22 மணிநேரம் 130 கிலோ மீற்றர் சைக்கிளில் பணித்து தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்கு வந்துள்ளான்.

தனது தாய் தன்னை திட்டியதால், உடனே பாட்டியிடம் கூறுவதற்கு முடிவு செய்த சிறுவன் இவ்வாறு இரவு சைக்கிளில் புறப்பட்டுள்ளான். இரவில் தனது வீட்டிலிருந்து எடுத்து வந்த பிரட் மற்றும் தண்ணீரை குடித்துக் கொண்டு தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளான்.
பின்பு பொலிசார் குறித்த சிறுவனின் தாய் மற்றும் பாட்டியை வரவழைத்து விசாரணை மேற்கொண்ட போது, சிறுவனின் தாய் கோபத்தில் பாட்டி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளது தெரியவந்துள்ளது.
தாயிடம் கோபித்துக் கொண்டு சிறுவன் இவ்வளவு தூரம் தனியாக சைக்கிளில் பயணித்தது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.