வைரமுத்து வீடு இல்லாமல் இருக்கிறாரா? அரசு விடுத்த அறிவிப்பால் கொதிந்தெழுந்த சங்கர்
வைரமுத்துவிற்கு கனவு இல்லம் கொடுக்கப்போவதாக சொல்லி அரசு அறிவித்திருந்த நிலையில் அதனைக் கேட்டு பல விமர்சனங்களைக் கொட்டி வருகிறார் சவுக்கு சங்கர்.
கவிஞர் வைரமுத்து
தமிழில் 100இற்கும் அதிகமான படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்தவர் தான் வைரமுத்து.
கவிதைகள், நாவல்கள் போன்றவையும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழில் எண்ணற்ற பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார் ஆனால் அவருக்கே கடினம் கொடுத்த சில பாடல்களும் தமிழ் சினிமாவில் அதிகம் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு இருக்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் அளித்திருந்தார். இது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வைரமுத்துவிற்கு வீடு
தமிழக அரசு சார்பில் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் அவர்கள் விரும்பிய இடத்தில் வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் சர்வதே அளவில் பல விருதுகள் பெற்றதால் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த செய்திக்கு அரசியல் விமர்சகரும், பிரபல பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வைரமுத்து வீடு இல்லாமல் தெருவிலா இருக்கிறார் அவருக்கு எதுக்கு கனவு இல்லம் 2006ல சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு ரூ.5 லட்சம் வாங்குன பெரிய மனுசன். அந்த படமே அரசு மானியத்துல எடுத்துது. இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா? என கடுமையாக தாக்கியிருக்கிறார்.
கவிஞருக்கு இந்த மூணு வீடு போதாதா ? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு ? யார் அப்பா வீட்டு பணம் ? @CMOTamilnadu pic.twitter.com/mCgI0tPbzu
— Savukku Shankar (@Veera284) June 8, 2023
மேலும் தனது மற்றொரு பதிவில், கவிஞருக்கு 3 வீடுகள் இருப்பது போதாதா? கொஞ்சம் மனசாட்சி இருக்கா உங்களுக்கு யார் அப்பா வீட்டு பணம்? என தமிழக முதல்வரை மையப்படுத்தி கேள்வி கேட்டிருக்கிறார்.
இவரின் இந்த பதிவுகள் எல்லாம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றது.
வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு ? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு ?
— Savukku Shankar (@Veera284) June 8, 2023
2006ல சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல.
பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் வாங்குன பெரிய மனுசன் ?♀️
அந்த படமே அரசு மானியத்துல எடுத்துது.
இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா ?… pic.twitter.com/Ahx2YdToo5