விரல்களின் நீளத்தை வைத்து வெளிவரும் பல உண்மைகள்... பலருக்கும் தெரிந்திடாத விரல் ஜோதிடம்
நாடி ஜோதிடம், எண் கணிதம், ஜாதகத்தின் அடிப்படையில், கை ரேகை ஜோதிடம் என பல ஜோதிட முறைகள் உள்ளன. இங்கு நாடி ஜோதிட அடிப்படையிலும், உங்களின் விரல் அமைப்பு மற்றும் நீளத்தைப் பொறுத்து எப்படிப்பட்ட பலன்களை நீங்கள் பெறுவீர்கள் என்பதை விரிவாக பார்ப்போம். சிறிய விரல்கள் சிறிய விரல்களை உடையவர்கள், அதிக கவன சிதறல்கள் உடையவர்களாகவும் உள்ளார்கள்.
இவர்களுக்கு பொறுமையின்மை, மூர்க்கம் மற்றும் ஒன்றை அறிந்து அதை அடைய விரும்புவதால், அவர்கள் எதற்கும் காத்திருக்க மாட்டார்கள், மேலும் அவர்கள் அது குறித்த விவரங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த வகை விரல் உள்ளவர்கள் எதையுமே மேலோட்டமாக செய்வதையே விரும்புகிறார்கள்.
இவர்களின் சிந்தனைகள் பெரிய அளவில் இருக்கும், ஆனால் அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக கவனம் செலுத்தி முடிக்க மாட்டார்கள். நடுத்தர அளவுள்ள விரல்கள் நம்மில் சிலருக்கு விரல்கள் நீளமாகவோ அல்லது சிறியதாகவோ அல்லாமல், நடுத்தரமான அளவு கொண்டதாக இருக்கும். நீங்கள் நினைப்பது சரியே! அவர்களின் குணநலன்களும் மற்றும் ஆளுமை பண்புகளும் அவர்களின் நடுத்தர அளவுள்ள விரல்களை போலவே, நீண்ட மற்றும் குறுகிய விரல்களின் கலவையாக இருக்கும்.
நடுத்தர விரல் கொண்டவர்கள் எப்போதும் தங்களை வெளிக்காட்டுவதை விரும்புவதில்லை.மேலும் அவர்கள் சூழ்நிலையைப் பொறுத்தே தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். அதுவரை அவர்கள் உருவமற்றவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு பிடித்துவிட்டால் எந்த ஒரு பணியையும், அதீத கவனம் செலுத்தி அனுபவித்து செய்வார்கள், ஆனால் மற்றவர்கள் கூறி எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
நீண்ட விரல்கள் இவர்கள் சிறிய விரல் உடையவர்களுக்கு நேர் எதிராக நடக்க கூடியவர்களாக இருப்பார்கள், மேலும் நீண்ட கால இலக்குகளைக் கொண்டவர்களாகவும்,எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் நின்று விளையாடுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு பொறுமை மற்றும் விடாமுயற்சி உள்ளிட்ட நற்பண்புகள் இயல்பாகவே உள்ளன.
எந்த ஒரு காரியத்தையும்,ஒழுங்காகவும், கவனமாகவும் செய்ய இவர்கள் கால நேரமே பார்க்கமாட்டார்கள். எனவே மிகவும் சிக்கலான அல்லது விரிவான திட்டத்திற்காக நீங்கள் ஒருவருடன் அணிசேர வேண்டிய நிலை இருந்தால்,அதைச் செய்ய உங்களுக்கு உதவ அழகான நீண்ட விரல்களை உடையவர்களை தேர்ந்தெடுங்கள். அவர்கள் விடைகளைத் தேடுவதில் மகிழ்ச்சி அடைபவர்களாகவும், மேலும் இவர்கள் மனசாட்சி மற்றும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஃபாலஞ்ச்கள் எப்படி உங்களுக்கு எளிதாக கூறுவது?! சரி உங்கள் உள்ளங்கை பகுதியை திருப்பி நீங்கள் பார்க்கும்படி வையுங்கள், இப்போது உங்கள் விரல்களைப் பாருங்கள், உங்கள் விரல்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளனவா!, அவையே ஆங்கிலத்தில் ஃபாலஞ்ச்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஃபாலஞ்ச்கள் ஒன்றையொன்று ஒப்பிடுகையில், அதன் நீளத்தை பொறுத்து உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள உதவுகிறது - எடுத்துக்காட்டாக, விரல்களில் மேல்பாகம் மற்றும் அடிப்பாகத்துடன் ஒப்பிடும்போது உங்களின் நடுத்தர ஃபாலஞ்ச் நீளமாக இருந்தால், நீங்கள் வணிக விஷயங்களில் நாணயமானவராக இருப்பீர்கள்.
உங்கள் விரல் நகங்கள், உங்களை விரல்களின் முனை அல்லது மேல் ஃபாலஞ்ஜில் உள்ளது மற்றும் இது உங்களை ஆன்மீகத்துடன் இணைக்கிறது. நடுத்தர ஃபாலஞ்ச் உங்கள் புத்தியுடன் தொடர்புடையது. வாழ்க்கையின் பொருள் சார்ந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை உங்களை விரல்களின் கீழுள்ள ஃபாலஞ்ச் வெளிப்படுத்துகிறது.
கைரேகையில் கிரகங்கள் மற்றும் விரல்கள் வியாழன் விரல் (ஆள்காட்டி விரல்) இது ஆள்காட்டி விரல் என்றும் அழைக்கப்படும், இவ்விரலானது உங்களின் தலைமைத்துவ குணங்களையும், ஈகோ மற்றும் திறன்களைப் பற்றியும், அதிகாரத்திற்கான உங்களது தேவை எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதையும் சொல்கிறது.
வியாழன் விரல் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்கள் மீது உங்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த முடியும். சாதாரணமாக ஒரு ஆள்காட்டி விரலின் நீளம்,அவ்விரலின் நுனி உங்கள் சனி அல்லது நடுத்தர விரலின் மேல் ஃபாலஞ்சின் நடுவில் இருக்க வேண்டும். அதை விடக் குறைவாக இருந்தால், நீங்கள் கொஞ்சம் வெட்கப்படுபவராகவும், தயக்கம் மற்றும் கூச்ச சுபாவமுள்ளவராக இருக்கலாம்.பொதுவாகவே நீங்கள் தலைமை பொறுப்பை விரும்பமாட்டீர்கள்.
சனி விரல் (நடுவிரல்) அதாவது உங்களின் நடுவிரல். ஜோதிடத்தில் சனி கிரகம் நம்முடைய பொறுப்பு மற்றும் ஒழுக்கத்தை நினைவூட்டுவது போல, நாம் செய்வோம் என்று சொன்னதைச் செய்யும்போது நமது நம்பகத்தன்மை மற்றும் தன்மை குறித்த நமது உணர்வுகளை இந்த விரல் குறிக்கிறது. சிறிய நடுத்தர விரல் உடையவர்கள் என்றால், அவர்கள் பொறுப்புகளை விரும்பாமல், மேலும் தன்னிச்சையாக இருக்க விரும்புவார்கள்.
வழக்கத்தை விட நீண்ட சனி விரல்கள், உங்கள் வலுவான தன்மையைக் குறிக்கின்றன - சாதாரண அல்லது சிறிய அளவைக் கொண்ட விரலுள்ளவர்களைக் காட்டிலும் வாழ்க்கையை நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வீர்கள். மிக நீண்ட நடுத்தர விரல் பற்றற்ற தன்மையையும்,தனியாக இருப்பதற்கான விருப்பத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
அப்பல்லோ விரல் (மோதிர விரல்) மோதிர விரல்கள் நம் படைப்பாற்றல் மற்றும் கலைத் திறனுடன் பிணைக்கப்பட்டுள்ளன - மேலும் வாழ்க்கையில் தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்க விரும்பும் ஒருவரை அவ்விரல் சுட்டிக்காட்டுகிறது. அப்பல்லோ விரல் வியாழன் விரலை விட நீளமாக இருக்கும்போது, படைப்புத் தன்மையைக் கொண்டவராகவும், வாழ்க்கையில் அபாயகரமான முயற்சிகளை மேற்கொள்பவராகவும் இருக்கிறார்கள். சிறிய மோதிர விறல் உடையவர்கள் படைப்பு முயற்சிகளில் அதிக ஆர்வம் அல்லது விருப்பம் இல்லாதவர்களாகவும், மேலும் ஆற்றல் அல்லது உற்சாகம் இல்லாதவர்களாகவும் இருக்கலாம், மேலும் விடா முயற்சி செய்யாமலும், அவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் குறைவாகவும் இருக்கும்.
சனி விரல் (நடுவிரல்) அதாவது உங்களின் நடுவிரல். ஜோதிடத்தில் சனி கிரகம் நம்முடைய பொறுப்பு மற்றும் ஒழுக்கத்தை நினைவூட்டுவது போல, நாம் செய்வோம் என்று சொன்னதைச் செய்யும்போது நமது நம்பகத்தன்மை மற்றும் தன்மை குறித்த நமது உணர்வுகளை இந்த விரல் குறிக்கிறது. சிறிய நடுத்தர விரல் உடையவர்கள் என்றால், அவர்கள் பொறுப்புகளை விரும்பாமல், மேலும் தன்னிச்சையாக இருக்க விரும்புவார்கள்.
வழக்கத்தை விட நீண்ட சனி விரல்கள், உங்கள் வலுவான தன்மையைக் குறிக்கின்றன - சாதாரண அல்லது சிறிய அளவைக் கொண்ட விரலுள்ளவர்களைக் காட்டிலும் வாழ்க்கையை நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வீர்கள். மிக நீண்ட நடுத்தர விரல் பற்றற்ற தன்மையையும்,தனியாக இருப்பதற்கான விருப்பத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
அப்பல்லோ விரல் (மோதிர விரல்)
மோதிர விரல்கள் நம் படைப்பாற்றல் மற்றும் கலைத் திறனுடன் பிணைக்கப்பட்டுள்ளன - மேலும் வாழ்க்கையில் தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்க விரும்பும் ஒருவரை அவ்விரல் சுட்டிக்காட்டுகிறது. அப்பல்லோ விரல் வியாழன் விரலை விட நீளமாக இருக்கும்போது, படைப்புத் தன்மையைக் கொண்டவராகவும், வாழ்க்கையில் அபாயகரமான முயற்சிகளை மேற்கொள்பவராகவும் இருக்கிறார்கள்.
சிறிய மோதிர விறல் உடையவர்கள் படைப்பு முயற்சிகளில் அதிக ஆர்வம் அல்லது விருப்பம் இல்லாதவர்களாகவும், மேலும் ஆற்றல் அல்லது உற்சாகம் இல்லாதவர்களாகவும் இருக்கலாம், மேலும் விடா முயற்சி செய்யாமலும், அவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் குறைவாகவும் இருக்கும்.