நீயா நானாவில் நடுநிலை தவறிய கோபிநாத்! நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காட்சி
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இந்த வாரம் நடுநிலை தவறியதோடு, அரங்கத்தை விட்டு வெளியேறுவதாக வெளியான ப்ரொமோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. மதிய உணவு எனக்கு பிடிக்கவில்லை என்று கூறும் பிள்ளைகள் மற்றும் அவர்களின் அம்மாக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
நடுநிலை தவறி தவறிய கோபிநாத்
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் மதிய உணவு எனக்கு பிடிக்கவில்லை என்று கூறும் பிள்ளைகள் மற்றும் அவர்களின் அம்மாக்கள் என்று விவாதம் செல்கின்றது.
இதில் குழந்தைகளின் மதிய உணவை பார்த்த கோபிநாத், நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் அதிகமானோர் உருளைக்கிழங்கை மதிய உணவிற்கு கொடுத்துவிட்டுள்ளனர்.
பிள்ளைகளின் நிலையைக் கண்ட கோபிநாத் இதுவரை நான் நடுநிலை தவறியதில்லை, இந்த முறை தவறுகிறேன் என்று குழந்தைகள் பக்கம் நிற்கின்றார். அதுமட்டுமின்றி நிகழ்ச்சியை விட்டு வெளிநடப்பு செய்வதாகவும் அறிவித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.