சத்தியம் செய்து சொல்லுங்க! நீயா நானா நிகழ்ச்சியில் பெண்ணிடம் கோபிநாத் காட்டிய ஆவேசம்
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இந்த வாரம் வீட்டு வேலைக்கு பணியாளர்களை அமர்த்து பெண்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. மதிய உணவு எனக்கு பிடிக்கவில்லை என்று கூறும் பிள்ளைகள் மற்றும் அவர்களின் அம்மாக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
சரமாரியாக கோபிநாத் எழுப்பிய கேள்வி
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் வீட்டு வேலை செய்யும் பெண்களும், அவர்களை வேலைக்கு அமர்த்திய குடும்பத் தலைவிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இன்றும் பல வீடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களை குடும்பத்தலைவிகள் ஒரு அடிமை போன்று நடத்துவதை அவதானிக்க முடிகின்றது. அதனை தெள்ளத்தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது நீயா நானா நிகழ்ச்சி. குடும்பத்தலைவிகளிடம் கோபிநாத் எழுப்பும் கேள்வியை இங்கே காணலாம்.