நல்லவரா? இல்ல கெட்டவரா? இத வச்சி தெரிஞ்சிக்கலாம்...
உண்மையில் ஒருவர் நல்லவரா? கெட்டவரா என்பதை தெரிந்துகொள்வது சற்று கடினம் தான்.
ஏனென்றால் ஒரு சிலர் வெளித்தோற்றத்துக்கு நல்லவராகவும் உள்ளுக்குள் வேறொன்றை வைத்துக்கொண்டும் இருப்பார்.
ஆனால், ஒரு சில விடயங்களை வைத்து நீங்கள் விரும்பும் நபர் நல்லவரா? அல்லது கெட்டவரா? என்பதை தெரிந்துகொள்ளலாம்.
செயல்களைக் கவனியுங்கள்
வெறும் வாய் வார்த்தைகளை வைத்து ஒருவர் நல்லவர் என்ற தீர்மானத்துக்கு வந்துவிட முடியாது. செயல்கள்தான் ஒருவரைப் பற்றி தெளிவான ஒரு விம்பத்தைக் கொடுக்கும். அதனால் நீங்கள் விரும்பும் நபர் எதற்கு முன்னுரிமை கொடுக்கின்றார், எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பவற்றை கவனியுங்கள்.
உறவுகளின் மதிப்பு
தன்னைச் சார்ந்த உறவுகளை மதிக்கும் பழக்கம் கொண்டுள்ளாரா என்பதை கவனியுங்கள். தங்களது உறவுகளை பராமரிக்கும் ஒருவருக்கு இயல்பிலேயே அக்கறை மற்றும் மரியாதை காணப்படும்.
மற்றவரை நடத்தும் விதம்
சக மனிதனை மதிப்பது ஒரு நல்ல குணம். அந்த குணம் இருக்கின்றதா என்பதைப் பாருங்கள்.
நேர்மை
அவர்களின் வார்த்தையில் உண்மை உள்ளதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். நேர்மை ஒரு உறவுக்குள் மிகவும் முக்கியமானது.