அதிகம் வெறுக்கப்பட்ட ஆரிக்கு அடித்த அதிர்ஷ்டம்! கடைசியா நேர்மை வென்று விட்டது! பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்
பிக்பாஸ் தமிழ் 4 சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஆரி அர்ஜுனன் டைட்டிலை வெல்ல, பாலாஜி ரன்னர் அப்பாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆரி, பாலாஜி இருவரையும் பாராட்டி வருகின்றனர்.
டைட்டிலை வென்ற ஆரிக்கு பிக்பாஸ் டிராபியுடன் சேர்த்து ரூபாய் 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவர் முதன்முறையாக சக போட்டியாளர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஆரி பிக்பாஸ் டைட்டிலை வென்று இருக்கிறார் என பாராட்டி உள்ளார்.
இதேபோல பலரும் ஆரியை போட்டிபோட்டு பாராட்டி வருகின்றனர்.
First Time in BB Tamil
— Raja VJッ (@rajavjoff) January 17, 2021
The Most Hated Contestant by the Housemates Has Won the Title #AariArjunan ?#BiggBossTamil4 pic.twitter.com/qNY8mShxW4