இந்தியாவில் அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாடும் இருக்கு..
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன.
அதில், ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனிப்பட்ட மொழி, கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட சவால்களை கொண்டுள்ளன. அனைத்து மாநிலங்களும் எதிர்கொள்ளும் ஒரே ஒரு ஒற்றுடை குற்றச்செயல்கள் தான்.
குற்றச் செயல்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது.
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) 2024 அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் குற்ற விகிதம் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த தேசிய குற்ற விகிதம் சிறிய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், சில மாநிலங்களில் குற்ற விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வறுமை, வேலையின்மை, சமூக பதட்டங்கள், கல்வியின்மை மற்றும் சில நேரங்களில் அரசியல் உள்ளிட்ட காரணங்களால் குற்ற விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. சட்ட ஒழுங்கை மேம்படுத்த அரசாங்கம் தனி கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது.
அந்த வகையில், இந்தியாவில் அதிக குற்றங்கள் பதிவாகும் மாநிலம் பற்றிய விவரங்களை பதிவில் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசம் | இந்தியாவில் அதிகம் குற்றம் செய்யும் மாநிலத்தில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. இங்கு வாழும் 1000 பேருக்கு 7.4 என்ற தனிநபர் குற்ற விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களை விட கொலை, கற்பழிப்பு மற்றும் கடத்தல் உள்ளிட்ட வன்முறை குற்றங்கள் அதிகம் நடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மக்கள் தொகை அளவு, அரசியல் செல்வாக்கு, மத மோதல்கள், வேலையின்மை மற்றும் சில பகுதிகளில் மோசமான சட்ட அமலாக்கம் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும். |
அருணாச்சலப் பிரதேசம் | குறைந்த மக்கள்தொகை கொண்ட வடகிழக்கு மாநிலமாக பார்க்கப்பட்டாலும் அருணாச்சலப் பிரதேசத்தில் தனிநபர் குற்ற விகிதம் 5.8 ஆக உயர்ந்து வருகிறது. திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள், உள்ளூர் தகராறுகள் மற்றும் வீட்டு வன்முறை ஆகிய காரணங்களால் இதுபோன்ற குற்றங்கள் அதிகமாகி வருகின்றது. |
ஆந்திரப் பிரதேசம் | ஆந்திரப் பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் குற்ற விகிதம் 3.6 ஆக தான் உள்ளது. இங்கு சைபர் குற்றங்கள், சொத்து தகராறுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. நகரமயமாக்கல், வீட்டு மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி போன்ற காரணிகள் மாநிலத்தின் குற்ற எண்ணிக்கைக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. |
தமிழ்நாடு | அதிகம் குற்றங்கள் செய்யும் மாநிலங்களின் வரிசையில், தமிழ்நாடு 14 வது இடத்தில் உள்ளது. |
நாகலாந்து | நாகலாந்து தான் இந்த பட்டியலில் குறைந்த குற்ற விகிதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |