இலங்கையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - கடும் அவதியில் மக்கள்
கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே உலகம் முழுவதும் பொருளாதாரம் சரிவை சந்தித்து மெல்ல மெல்ல மீண்டு வந்தது.
ஆனால், தற்போது உக்ரைன், ரஷ்யா போரால் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியடைந்து வருகிறது. அதன்படி இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் அவதியில் உள்ளார்கள்.
விலை அதிகரிப்பு
சமீபத்தில் ஒரு லிட்டரின் பெட்ரோல் விலை ரூ.77 அதிகரித்தது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ 55 ஆக உயர்ந்தது.
மொத்தமாக பெட்ரோல் 254 ரூபாய்க்கும் டீசல் 176 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
மின் வெட்டு
இதனால் பெரும்பாலான மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதுமட்டுமின்றி இலங்கையில் நிலக்கரி வாங்க முடியாததால், 7 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

மளிகை பொருட்கள் விலை உயர்வு
ஒரு பாக்கெட் பிரட்டின் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ 35 உயர்ந்துள்ளது.
அடுத்து, ஒரு கிலோ பருப்பின் விலை ரூ 250 , சர்க்கரையின் விலை ரூ 215, உருளைக்கிழங்கின் விலை ரூ 300, பெரிய வெங்காயத்தின் விலை ரூ 400, உளுந்து கிலோ ரூ 2000 வரை உயர்ந்துள்ளது.

உச்சத்தை தொட்ட தங்கம் விலை
இந்நிலையில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ 1.50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 1.39 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.
இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பலர் போராட்டத்திலும் ஈடுப்பட்டு வருகிறார்கள்.