சர்க்கரை வியாதியுள்ளவர்கள் ஒரு கிளாஸ் இஞ்சி டீ குடித்தால் போதுமாம்! எத்தனை கிராம் சேர்க்கணும் தெரியுமா?
பொதுவாக உணவுகளில் இஞ்சி சேரப்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது என கூறுவார்கள். இந்த விடயம் எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்று உங்களுக்கு தெரியுமா?
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இஞ்சி சாப்பிட்டால் அவர்களின் சர்க்கரையின் அளவு கூடி இருந்தால் குறைத்து உடனடியாக நிவாரணம் தரும்.
மேலும், விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
இதனால் இஞ்சி சர்க்கரை நோயாளர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்து கொள்ள உதவியாக இருக்கின்றது.
அந்த வகையில் இஞ்சியில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இஞ்சியை எப்படி சாப்பிடணும் தெரியுமா?
1. காய்கறிகள் + இஞ்சி
பொதுவாக சமைக்கும் போது வாசணைக்காக சிலர் இஞ்சி சேர்த்து கொள்வார்கள். இதனால் வாசணை மட்டும் கிடைப்பதில்லை. மாறாக சர்க்கரை நோயாளர்கள் இந்த உணவுகளை சாப்பிடும் போது இரத்த சர்க்கரையின் அளவும் குறைக்கிறது. உணவுடன் சேர்ப்பதால் பக்க விளைவுகளும் குறைவு.
2. இஞ்சி தேநீர் / இஞ்சி டீ
சிறிதளவு இஞ்சியை நசுக்கி போட்டு கொதிக்கும் நீரில் சேர்த்து தேநீர் தயாரிக்கலாம். இவ்வாறு செய்யும் போது தேவை இருந்தால் மட்டும் சர்க்கரை சேர்த்து கொள்ளவும். மேலும் இதில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கொள்ளலாம்.
3. இஞ்சி மிட்டாய் / இஞ்சி மரப்பா
பொதுவாக சர்க்கரை வியாதியுள்ளவர்கள் மிட்டாய் வகைகளை விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த இஞ்சி மிட்டாய்களை பயமின்றி எடுத்து கொள்ளலாம்.
ஏனென்றால் இதில் அரைத்த இஞ்சியுடன் தேன் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.
இஞ்சி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. இஞ்சியில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இதனால் இஞ்சி சாப்பிடும் போது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
2. சர்க்கரையுடன் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். மேலும் அழற்சியை எதிர்த்து போராடுகிறது.
3. இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் உடலிலுள்ள செல்களில் இன்சுலினை பயன்படுத்த உதவுகிறது.
4. நாளொன்றுக்கு 4 கிராமுக்கு மேல் இஞ்சியை உட்கொள்ளக்கூடாது. மீறினால் நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுத்தும்.