எலுமிச்சை ஊறுகாயை நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?
ஊறுகாய் என்றதுமே பலருக்கு நாவூரும். அந்த அளவு உணவில் சுவையை ஏற்படுத்த கூடிய ஒன்று.
எனினும், அதிக மக்களின் மனதில் ஊறுகாயை ஆரோக்கியமற்ற உணவாகவே கருதுகின்றனர்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.
அளவாக எடுத்து கொண்டால் எல்லாம் ஆரோக்கியமே....
நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்க்கலாமா?
பொதுவாகவே எலுமிச்சைத் தோலை ஏதாவது ஒரு வகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், பல்வேறு உடல்நல பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
உணவில் ஒரு சிறிய அளவு எலுமிச்சை ஊறுகாய் சேர்ப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
இது செம்பு, பொட்டாசியம், இரும்பு மற்றும் கால்சியத்தை நிரம்பியுள்ளது.
எலுமிச்சை ஊறுகாயில் என்சைம்கள் உள்ளன. அவை உடலின் நச்சுத்தன்மையை அனுமதிக்கின்றன. ஆரோக்கியமான செரிமானப் பாதை முகப்பருவைக் குறைத்தல் மற்றும் எடை இழப்பை ஊக்குவித்தல் போன்ற பல வழிகளில் உதவும்.
எனவே நீரிழிவு நோயாளிகள் அளவாக ஊருகாய் சேர்த்து அதன் பலன்களை பெற்று கொள்ளுங்கள். இதேவேளை, அளவுக்கு மிஞ்சினால் அமுர்தமும் நஞ்சி என்பதை மறவாதீர்கள்.
அதிசய சத்துக்கள் நிறைந்த எலுமிச்சைத் தோல்
- எலுமிச்சைத் தோலில் கால்சியம் 134 மில்லிகிராம், சாற்றில் 26 மில்லிகிராம் இருக்கிறது.
- தோலில் பொட்டாசியம் 160 மில்லிகிராம், சாற்றில் 138 மில்லிகிராம்.
- வைட்டமின் சி, தோலில் 129 மில்லிகிராம்,சாற்றில் 53 மில்லிகிராம்.
- நார்ச்சத்து, தோலில் 10.6 கிராம்; சாற்றில் 2.8 கிராம்.
- வைட்டமின் ஏ, தோலில் 50 IU, சாற்றில் 22 IU. (IU என்பது வைட்டமின்களை அளக்கும் சர்வதேச அளவை).
- தோலில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
- பற்கள், எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.எலும்புகளுக்கு வலு தரும் கால்சியம் இதில் இருக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி, பற்களையும் எலும்புகளையும் வலுவாக்க உதவும்.
- 100 கிராம் தோலில், சராசரியாக மனிதனுக்குத் தேவைப்படும் கால்சியத்தில் 13.4 சதவிகிதமும், வைட்டமின் சி 143 சதவிகிதமும் இருக்கின்றன.
- இதிலுள்ள வைட்டமின் சி, நம் உடலில் இருக்கிற குருத்தெலும்புகள், தசைநார்கள், தசை நாண்கள், தோல், ரத்தக்குழாய்களைக் கட்டமைக்கும் செயல்களில் அதிகமாக உதவுகின்றன.
- ரத்தக்குழாய்ச் சுவர்களை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக்கொள்ளவும், தசைகளின் செயல்பாடுகளுக்கும், ஹார்மோன் சுரப்பிலும் எலுமிச்சைத் தோலிலிருக்கும் கால்சியம் முக்கியப் பங்காற்றுகிறது.