செரிமான அமைப்பை சீராக்கும் இஞ்சி துவையல்! அசத்தல் சுவையில் எப்படி செய்வது?
பொதுவாக இஞ்சி நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாக காணப்படுகின்றது.நமது சமையலின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சி உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. செரிமானத்தை மேம்படுத்துவதிலும் வாயுவை எதிர்த்துப் போராடுவதிலும் இஞ்சி பெரும் பங்கு வகிக்கின்றது.
இஞ்சி சாறு உடலில் இன்சுலின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இஞ்சி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்க சிறந்த தெரிவாக காண்படுகின்றது.
தினசரி உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கொலஸ்ட்ரால் இதய நோய் அபாயத்தை குறைக்கு உதவுகின்றது.
இஞ்சியிலுள்ள ஜின்ஜரால் என்ற பொருள் உமிழ்நீர் மற்றும் பித்த நீரின் சுரப்பை அதிகரிக்கச் செய்து ஜீரணம் நல்ல முறையில் நடைபெற உதவுகிறது.
தொன்று தொட்டு குமட்டலையும் வாந்தி வரும் உணர்வையும் கட்டுப்படுத்த இஞ்சி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் வயிற்று கோளாறு, பசியின்மை, மலச்சிக்கள் என ஒட்டு மொத்த செரிமான அமைப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சியை வைத்து அட்டகாசமான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி துவையல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- இஞ்சி
- உளுத்தம் பருப்பு
- மிளகு
- உப்பு
- புளி
செய்முறை
முதலில் இஞ்சியை சுத்தம் செய்து தோல் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி நன்றாக வதக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பா்ததிரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு, மிளகு, உப்பு, புளி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
வதக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் ஏனைய பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்தால் அவ்வளவு தான் சுவையான இஞ்சித் துவையல் தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |