வீட்டில் முட்டை இருக்கா? அப்போ குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த ரெசிபியை செஞ்சி கொடுங்க
வீட்டில் பாடசாலை செல்லும் குழந்தைகள் இருந்தால் மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸை செய்து கொடுக்க சொல்லி நிச்சயம் கேட்பார்கள்.
இப்படி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் ஸ்நாக்ஸ் சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் மிகவும் எளிமையான முறையில் முட்டையை வைத்து egg lollipop எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு...
முட்டை - 5-6
உப்பு - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
லாலி பாப் செய்வதற்கு...
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 3/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மைதா - 2 மேசைக்கரண்டி
சோள மாவு - 3 மேசைக்கரண்டி
தண்ணீர் - சிறிது
பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரில் ஊற்றி முட்டைகளை போட்டு அவித்து எடுத்து குளிரவிட வேண்டும்.
பின்னர் வேக வைத்த முட்டைகளை ஓடு நீக்கி துருவி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மைதா மாவை சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தனியாக ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்து, நீர் ஊற்றி கட்டிகளின்றி பதமாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து, சோள மாவு கலவையில் பிரட்டி, பின் பிரட் தூளில் போட்டு பிரட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
கடையாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பொரித்த உருண்டைகளின் மேல் ஒரு டூத்பிக் குச்சியை சொருகினால், அவ்வளவு தான் சுவையான முட்டை லாலிபாப் தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |