மூட்டு வலிக்கு Good bye சொல்லணுமா? முடக்கத்தான் தேசை செய்து சாப்பிடுங்க ரெசிபி இதோ!
ஆரோக்கியம் தரும் பல்வேறு கீரை வகைகளுள் முடக்கத்தான் கீரைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. வாதம் தொடர்பாக ஏற்படும் முடக்குகளை அறுக்கும் திறன் கொண்டுள்ளதாலேயே இதற்கு முடக்கத்தான் என்று பெயர்.
கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை போன்ற பல பெயர்களால் முடக்கத்ததான் கீரை அழைக்கப்படுகின்றது.
இது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், மூச்சுத்திணறல் , சுவாசப்பாதையில் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக காணப்படுகின்றது. மேலும் அது சரும பிரச்சினைகளை தீர்ப்பதிலும் பெயர் பெற்றதாக காணப்படுகின்றது.
முதியவர்களுக்கு வயதான காலத்தில் ஏற்படக்கூடிய மூட்டுவலி பிரச்சனைக்கு முடக்கத்தான் சிறந்த நிவாரணியாக காணப்படுகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட முடக்கத்தான் கீரையை கொண்டு எவ்வாறு அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முடக்கத்தான் தேசை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
அரிசி
வெந்தயம்
எண்ணெய்
உப்பு
முடக்கத்தான் இலை
செய்முறை
முதலில் அரிசியை சுத்தம் செய்து கல்களை நீக்கி சில் மணிநேரங்களுக்கு தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.
அரிசி நன்றாக ஊரிய பின்னர் அதனுடன் வெந்தயம், முடக்கத்தான் இலை ஆகியவற்றை ஒலு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்த மாவை புளிக்க விட்டு தோசை கல்லை இப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் தடவி தோசையை ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு சிறிது நெய் சேர்த்து எடுத்தால் மொறு மொறு முடக்கத்தான் தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |