உணவில் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டியதன் அவசியம் தெரியுமா?
தென்னிந்திய சமையலில் நல்லெண்ணெய்க்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது செரிமான அமைப்பு சீராக செயற்படுவதாக ஆய்வு ததகவல்கள் குறிப்பிடுகின்றது.
அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நல்லெண்ணெயில் சீசேமோல் எனும் பொருள் நிறைந்துள்ளது.இது இதய ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்திய கலாசாரத்தை பொருத்த வரையில் சமையலுக்கு மாத்திரமன்றி பல்வேறு கலாசார முறைமைகளிலும் நல்லெண்ணெய்க்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
எள் விதைகளிலிருந்து நல்லென்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக பல நூற்றாண்டு காலமான பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
நல்லெண்ணெயின் அவசியம்
நல்லெண்ணெய் சமையலுக்கு மாத்திரமன்றி உடல் வலிகளை குணப்படுத்தவும், முடி வளர்ச்சிக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.
நல்லெண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்து காணப்படுவதால் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல மருத்துவ குணங்கள் அதில் அடங்கியுள்ளது.
ஊட்டச்சத்து நிறைந்தது நல்லெண்ணெயில் வைட்டமின் இ அதிகமாக காணப்படுகின்றது. இது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
நல்லெண்ணெயில் இதயத்திற்கு நன்மை பயக்கும் நிறைவுறா கொழுப்பு மற்றும் பல்நிறைவுறா கொழுப்புகள் நிறைந்து காணப்படுகின்றது.இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கு துணைப்புரிகின்றது.
நல்லெண்ணெயை அடிக்கடி சமையலில் பயன்படுத்துவதால் இதய நோய் அபாயம் குறைவடைகின்றது.
நல்லெண்ணெயில் சீசமோல் மற்றும் சீசமினால் என்ற கலவைகள் அதிகமாக காணப்படுகின்றது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது எனவே உடல் அழற்சி குறைந்து கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் சீராக்க துணைப்புரிகின்றது.
நல்லெண்ணெயில் அதிகளவு கால்சியம் காணப்படுவதால் எலும்புகளை ஆரோக்கியமாகவும் பலமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றது.
செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கலை போக்கும் தன்மை அதில் நிறைந்து காணப்படுகின்றது.
நல்லெண்ணெயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகள் சில குறிப்பிட்ட நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.அதனால் அடிக்கடி சமையலில் நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டியது இன்றியமையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |