பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார்.
மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு சிகிச்சை பலனின்றி காலமானார்.
நகைச்சுவை நடிகர் செஷூ
2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த இவர், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலிலும் நடித்திருந்தார்.
சின்னத்திரையில் நடித்துக்கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ, வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், ஏ1, திரௌபதி, ஆண்டி இந்தியன், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில்
லொள்ளு சபாவில் நடித்து காமேடியானாக சினிமாவில் அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நிலையில், அவர் நடிக்கும் படங்களில் சேசு நடித்து வந்தார்.
அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்திலும் இவரது நடிப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் சேஷூ காலமானார்.
இவரின் திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |