மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா?
பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் மாம்பழ சீசன் ஆரம்பித்துவிடும். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.
அந்தளவுக்கு மாம்பழத்தின் சுவை அலாதியானது. இருப்பினும் மாம்பழத்துக்கு இருக்கும் கேள்வி மாங்காய்க்கு இருப்பதில்லை.
மாம்பழம் பிடிக்கும் பலருக்கும் மாங்காய் பிடிக்குமா? என்றால் பெரும்பாலானவர்களிள் பதில் இல்லை என்பேதாகவே இருக்கும்.
மாம்பழம் மற்றும் மாங்காய் இரண்டில் எது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எதில் ஊட்டச்சத்து அதிகம்?
உண்மையில் மாம்பழத்தை விட, மாங்காய்களில்தான் சத்துக்கள் அதிகம். உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மாம்பழத்தை விடவும் மாங்காயில் அதிகமாக காணப்படுகின்றது.
மாங்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுடன் மாம்பழத்தை விடவும் அதில் கலோரிகள் குறைவாகவே காணப்படுகின்றது.உடல் எடையை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு மாங்காய் சிறந்த தெரிவாக அமையும்.
மாம்பழத்தை விட மாங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது. அதனால் செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கலுக்கு மாங்காய் பெரிதும் துணைப்புரியும்.
வெயில் காலத்தில் மாங்காய் உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கின்றது. ஆனால் மாம்பழம் அதிக சூட்டை கிளப்பிவிடும் கோடை காலத்தில் மாம்பழத்தை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
மாங்காயை சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிட முடியும் இதில் சர்க்கரை அளவும் குறைவாகவே இருக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துவதால் உடல் எடையை குறைக்க உதவும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், மாம்பழத்தை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். கட்டாயம் மாங்காயை பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது தொப்பை பிரச்சினைக்கு மிக சிறந்த தீர்வு கொடுக்கின்றது.
அஜீரண பிரச்சினை , அசிடிட்டி பிரச்னை, வாந்தி, குமட்டல் போன்ற உடல் கோளாறுகளுக்கு மாங்காய் சிறந்த தீர்வாக அமையும்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சோர்வு ஆகியவற்றுக்கு மாங்காய் பெரிதும் துணைப்புரியும்.
மாங்காயில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்துடன் சேர்ந்து மக்னீசியம் சத்து அதிகமாக காணப்படுகின்றது.
மாங்காய் உடலில் உள்ள நச்சுக்ளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் சருமம் மற்றும் தலைமுடி மென்மையாகவும் பளப்பளப்பாகவும் மாறும்.
அடிக்கடி மாங்காய் சாப்பிட்டு வந்தால் கோடை காலத்தில் வியர்க்குரு பிரச்னைக்கு மட்டுமல்ல, வியர்வை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு கொடுக்கும்.
இதய நோய் உள்ளவர்கள் தினமும் மாங்காய் சாப்பிட வேண்டும். அதில் வைட்டமின் பி3 மிகக் குறைவாக காணப்படுகின்றது. இதய பிரச்னைகளை நீக்குவதில் மாங்காய் பெரிதும் துணைப்புரிகின்றது.
மாங்காயில் அதிகளவில் கால்சியம் இருப்பதால் பற்களை வலுவாக்குவதுடன் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் மஞ்சள் பற்கள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
மாங்காய் துண்டுகளை மென்று சாப்பிடுவதால் பற்கள் வெண்மையாக மாறுவதுடன் வாய் சுகாதாரத்தை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
மாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமான விடயம் தான் இருப்பினும் ஒப்பீட்டளவில் மாம்பழத்தை விடவும் மாங்காயில் அதிக ஊட்டச்சத்துக்களும் அதிக ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |