உங்களுக்குள் இந்த பாதிப்பு இருக்கா...அப்போ உங்க துணை கள்ளக் காதலில் இருந்திருக்காங்க!
உறவுகளிலேயே நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்ட உறவு என்றால், அது கணவன் மனைவி உறவுதான்.
அதில் சிறு விரிசல் வந்தால்கூட பெரிய இடைவெளியில் வந்து முடிந்துவிடும். அதிலும் கணவன் - மனைவி உறவுக்குள் ஏமாற்றப்படுவது என்பது மிகவும் கவலையான ஒரு விடயமாகும்.
தாம் மிகவும் நேசித்தவர் தமக்கு துரோகம் செய்யும்போது அது குறிப்பிட்ட அந்த நபரை மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்க நேரிடும் என்பது உண்மையே.
ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும்போது வேதனையால் உடைந்து, தொலைந்து போவது, அவமானத்துக்கு உள்ளாவது என்பது நம்மை புது ஒரு நபராக மாற்றிவிடுகிறது என்பது என்னவோ உண்மைதான்.
image - newsweek
சரி இனி இந்த மாற்றங்களை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்று பாருங்கள்.
சுயமரியாதை
ஒருவருக்கு துரோகம் செய்யும்போது அது சுயமரியாதையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரால் நீங்கள் ஏமாற்றப்படும் பொழுது நீங்கள் அவருக்கு தகுதியான நபராக இல்லாமல் இருக்கலாம் எள்கின்ற உணர்வு உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.
இது ஏனைய உறவுகளின் மீதுள்ள நம்பிக்கையைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல் தாழ்வு மனப்பான்மையையும் அதிகரித்து விடுகின்றது.
நம்பிக்கை
நமது துணையினால் நமக்கு துரோகம் இழைக்கப்பட்டதன் பின்னர் காதல் உறவைத் தாண்டி ஏனைய நண்பர்கள், உறவினர்களிடமும்கூட நாம் சகஜமாக பழகத் தயங்குவோம். அதனால் உங்களுக்குள்ளே ஒரு சுவரை அமைத்துக்கொண்டு மற்றவர்களிடமிருந்து தள்ளி இருக்க ஆரம்பிப்பீர்கள்.
image -jack's low office
உணர்ச்சி
நீங்கள் துணையினால் ஏமாற்றப்படும் பொழுது அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடும். இது கோபம், துரோகம், சோகம் போன்ற உணர்வுகளை எமக்குள் கொண்டுவந்துவிடும்.