சனி பகவானின் மனசு குளிர இந்த பரிகாரத்தை செய்யவும்!!
சனி பகவான் என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் பயந்து போவார்கள், ஆனால் உண்மையிலேயே சொல்ல வேண்டுமானால் நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனை வழங்கி நம்மை நல்வழிப்படுத்துபவரே சனி பகவான்.
புராணத்தின் படி,
சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு ஒரு கதை உண்டு. சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை.
இதை அறியாமல் அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார். கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன்.
ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால், அவன் மனைவி சபித்துவிட்டாள்.
"ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், தவ வலிமையின் ஆனந்தம் அடையாமல் போகட்டும் என்று சபித்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார்.
அன்று முதல் அவரது பார்வை வக்கிரமாக அமைந்துவிட்டது. மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம்.
சனி பகவானின் தாக்கத்தை குறைக்க என்ன செய்யலாம்?
சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கருப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும்.
பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும். பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும். வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.
அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்;அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்.
இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும். இவ்வாறு 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.