Getti Melam: முருகனை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட சிவராமன்! சைக்கோ மகேஷால் பறிபோன உயிர்
கெட்டி மேளம் சீரியலில் சைக்கோ மகேஷ் முருகனை கொலை செய்ய ஆள் அனுப்பிய நிலையில், தற்போது முருகனை காப்பாற்ற சென்ற சிவராமன் உயிரிழந்துள்ளார்.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் சீரியல் அடுத்தடுத்து பல திருப்பங்களை வெளியிட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குறித்த சீரியலின் கதையும் மிகவும் விறுவிறுப்பாக செல்வதால் மக்களும் அதிகம் விரும்பி அவதானிக்கின்றனர்.
இந்நிலையில் புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் சிவராமன் இறந்து போயுள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
அதாவது அஞ்சலியை திருமணம் செய்திருக்கும் மகேஷ் ஒரு சைக்கோவாக இருக்கின்றார். அஞ்சலி வீட்டில் வளர்ப்பு அண்ணனாக இருக்கும் முருகனுக்கும், மகேஷிற்கும் சிறுவயதிலிருந்தே ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கின்றது.
ஆனால் இந்த விடயத்தினை சீக்ரெட்டாக வைத்து கதை சென்ற நிலையில், முருகனின் அம்மாவை வீட்டில் அடைத்து வைத்துள்ளது சிவராமனுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் சிவராமனை கடத்தவும், முருகனையும் கொலை செய்யவும் மகேஷ் ஆட்களை அனுப்பியுள்ளார்.
இதனை அறிந்து கொண்ட சிவராமன் அவர்களிடமிருந்து தப்பித்து, முருகனை காப்பாற்றிய நிலையில் அவர் ரயிலில் அடிபட்டு இறந்துவிடுகின்றார்.
ஆனால் இதனை செய்த மகேஷ் ஒன்றும் தெரியாதது போன்று இருக்கின்றார். சிவராமனுக்கு முருகன் தான கடைசி காரியத்தை செய்ய வேண்டும் என்று அவரது மனைவி கூறியுள்ளார்.
பயங்கர விறுவிறுப்பாக சென்ற இந்த சீரியலில் இப்படியொரு இறப்பினை யாரும் எதிர்பாராத நிலையில், பார்வையாளர்களையும் சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |