இத்துனூண்டு ஓமம் எதுக்கெல்லாம் உதவுது பாருங்க.....
ஓம விதைகளை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மையான விஷயங்களும் இதன் மருத்துவ குணங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஓம விதைகள்
ஓம விதைகளை பச்சையாகவோ தண்ணீரில் கொதிக்க வைத்தும் சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடலில் நார்ச்சசத்து குறையும் சந்தர்ப்பத்தில் இந்த விதைகளை தண்ணீரில் அவித்து குடித்தால் வயிறு உப்புஷம் நீங்கி நன்றாக பசி எடுப்பதுடன் மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது.
வயிற்று பகுதியில் கெட்ட கொழுப்பு சேர்ந்து தொப்பையாக வெளிக்காட்டும் இந்த பிரச்சனை பொதுவாக பெண்களை சிரமப்பட வைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது.
காலையில் வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஓமத்தை கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் கெட்ட கொழுப்பு கரையத் தொடங்கி தொப்பை பிரச்சனை இருக்காது.
ஓமத்தை தண்ணீரில் ஒரு டம்லர் அரை டம்லர் ஆகும் வரை கொதிக்க விட்டு அதை குடித்து வருதல் வேண்டும். இதனால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சினைகளுக்கும் இருக்காது. இது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டதாகும். நுரையீரலில் சளிப்பிரச்சனை இருந்தால் இந்த ஒமம் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
நுரையீரலிலுள்ள சளியை அகற்றி வெளியே தள்ளிவிடும் தன்மை, இந்த ஓம விதைகளுக்கு உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளின் போது இருக்கும் இடுப்பு வலிக்கு ஓமத்தை அவித்து வடிகட்டி குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |