பச்சை மிளகாய் ஊறவைத்த தண்ணீர்: வெறும் வயிற்றில் குடித்தால் என்ன மாற்றம் ஏற்படும்?
பொதுவாகவே அனைவரும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் பச்சை மிளகாய். இது சமையலில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.
பச்சை மிளகாய் பரவலாக சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ள பெரியவர்கள் காயம் ஏற்பட்டவர்களுக்கு அதிகளவில் பச்சை மிளகாய் கொடுப்பதை அவதானித்திருப்போம்.
பச்சை மிளகாய் இயற்கை வலி நிவாரணியாக செயற்படுகின்றது. அளப்பரிய மருத்துவ நன்மைகளை கொண்ட பச்சைமிளகாய் ஊறதை்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பச்சை மிளகாய் தண்ணீர் நன்மைகள்
3-4 பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி அதில் சில கீரல்களை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
பச்சை மிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலை பல வகையான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பச்சை மிளகாய் நீர் தோல் மற்றும் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
பச்சை மிளகாய் நீர் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
பச்சை மிளகாயை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் பல்வேறு தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்போருக்கு பச்சை மிளகாய் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். இதில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகின்றது.
தினசரி வெறும் வயிற்றில் பச்சை மிளகாய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பது விரைவில் எடையை குறைக்க உதவும்.
மிளகாயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. என்றும் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தினசரி இந்த தண்ணீரை குடிப்பது நல்ல பலனை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |