முறைப்படி தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்ட இளைஞர்கள் - கண்ணீருடன் கூறிய வார்த்தை!
தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த ஆண் ஈர்ப்பாளர் இருவர் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் மற்றும் கிருஷ்ணா என்ற இருவர் கடந்த வெள்ளிக்கிழமை (08.07.22) அன்று தாலிக்கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், எங்கள் திருமணத்தை நடந்த போது மகிழ்ச்சியில் எங்களுக்கு கண்ணீர் வந்துவிட்டது. யாராவது எங்கள் திருமணத்தை நிறுத்திவிடுவார்களா? என்ற பயம் எங்களுக்குள் வந்தது. ஆனால், என் கையால் மூன்றாவது முடிச்சை போடும் போது என்னை அறியாமல் அழுதுவிட்டேன்.

கண்ணீருடன்
இனி, உனக்காக நான்.. எனக்காக நீ என்பது தான் கார்த்திக்கிடம் அந்த நொடி நான் சொல்ல நினைத்தது என கூறியுள்ளார். எல்லாரும் ஹனிமூனுக்கு ஊட்டி, கொடைக்கானல் போகணும்னு முடிவெடுப்பாங்க.
ஆனா, நாங்க ராமேஸ்வரம் போயிட்டு வரலாம்னு பிளான் பண்ணியிருக்கோம் என கூறியுள்ளனர். இந்த திருமணம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
