கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு
ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையிலான காதல் உறவுதான் சமூகத்தில் பொதுவாகக் காணப்படும் இயல்பான உறவுமுறையாக இருந்தாலும், ஆண் -ஆண் மற்றும் பெண்-பெண் மீதான ஈர்ப்பும் நீண்ட காலமாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.
பாலியல் நோக்குநிலை என்பது பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.

குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து, திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்துவதும் சட்டப்பூர்வமாகவும் சமூக அங்கீகாரத்துடனும் நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலும் இதுபோன்ற உணர்வுகளைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமூக அழுத்தம், குடும்பச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் பலர் அதை வெளிப்படையாக பகிரத் தயங்குகின்றனர்.
கணவர் 'கே' என வெளிப்படை
இந்த நிலையில், திருமணம் செய்து குழந்தை பிறந்த பிறகுதான், தனது கணவர் தன்னை ஒருபால் ஈர்ப்பாளர் (Gay) என்று வெளிப்படுத்தியதாக ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் அதற்காக விவாகரத்து செய்யாமல், குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரே வீட்டில் வாழும் முடிவை இருவரும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவின்படி, வீட்டின் கீழ்தளத்தில் கணவரும் அவரது ஆண் துணையும் வசித்து வருகிறார்கள். மேல்தளத்தில் அந்தப் பெண் தனது மகனுடன் வசிக்கிறார்.
இந்த வித்தியாசமான குடும்ப அமைப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளதுடன், ஒரு தரப்பினர் இவர்களின் முடிவுக்கு பாராட்டுகளை குவித்து வருவதுடன் மற்றொரு தரப்பு விமர்ச்சிக்கும் வகையில் கருத்துக்ளை பதிவிட்டு வருகின்றது.
திருமணத்திற்கு முன்பே தனது பாலியல் நோக்குநிலையை மறைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாதித்திருப்பது தவறு என்று ஒரு தரப்பினரும், அதே நேரத்தில், சண்டை, பிரிவு என்ற பாதையைத் தேர்ந்தெடுக்காமல், குழந்தையின் எதிர்காலத்தை முன்னிறுத்தி முதிர்ச்சியான அணுகுமுறையை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது என்று மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |