1,454 அடி எம்பயர் ஸ்டேட் : காதலை வெளிப்படுத்த உயிரைப் பணயம் வைத்த ரஷ்ய ஜோடி கைது!
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியில் மோதிரம் மாற்றி காதலை வெளிப்படுத்திய ஜோடி தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஆனால், தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஏறியதாகக் கூறி, அவர்கள் இருவரையும் நியூயார்க் காவல் துறை கைது செய்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த காதலர்களான ஏஞ்சலா நிகோலாவ் மற்றும் இவான் பீர்கஸ், உலகின் உயரமான கட்டடங்களின் உச்சிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏறி புகைப்படம் எடுப்பதில் பிரபலமானவர்கள்.
நேற்று ஜூலை 1ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் 1,454 அடி (443 மீட்டர்) உயரமுள்ள ஆண்டெனா கோபுரத்தின் உச்சிக்கு, கருப்பு உடை மற்றும் முகமூடி அணிந்து, பாதுகாப்புக் கயிறுகள் இன்றி ஏறினர்.
உச்சியை அடைந்த அவர்கள், "அதிகாரத்தின் மீதான காதலைவிட, காதலின் அதிகாரம் வெல்லும்போதுதான் உலகம் அமைதியைக் காணும்" என்ற வாசகத்துடன் கருப்புப் பதாகையை விரித்து உலக அமைதிக்கான செய்தியை வெளிப்படுத்தினர்.

ரஷ்ய ஜோடி கைது
பின்னர், கோபுரத்தின் கீழ்ப்பகுதியில் இவான் ஒரு முழங்காலிட்டு ஏஞ்சலாவிடம் திருமண முன்மொழிவு செய்து மோதிரம் அணிவித்தார். இதையடுத்து இருவரும் அணைத்துக்கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.
இந்தக் காட்சியைக் கண்ட பொதுமக்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். விசாரணைக்குப் பிறகு, தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் உரிய அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து, ஆபத்தான முறையில் கட்டடத்தில் ஏறிய குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🚨 BREAKING: 2 people have climbed the Empire State Building in New York to fly a flag. The flag reads “When the power of love beats the love of power the world knows peace.” pic.twitter.com/YrIudqf9Lx
— FOX 4 NEWS (@FOX4) July 1, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |