முதல்வர் விஜய் பற்றி பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - படுவைரலாகும் காணொளி!
முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், தனது சிறுவயது நினைவுகளைப் பற்றி சமீபத்தில் பேசிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுவயதில் தந்தையுடன் அதிகம் பயணித்திருந்தாலும், தற்போது விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் அவர் தந்தையை பிரிந்த பிறகு அவர் தாயுடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் விரைவில் வெளியாக உள்ளது.
தந்தை பற்றி பேசிய ஜேசன் சஞ்சய்
இந்நிலையில், ஜேசன் ஒரு சிறுவனுடன் பேசும் வீடியோவில் தனது சிறுவயது சம்பவங்களை சிரிப்புடன் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நடிகர் சிறுவயதில் தன்னை “கடத்திச் சென்றது போல” நடந்த சம்பவத்தை அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

விஜய்-சங்கீதா தம்பதியரின் விவாகரத்து வதந்திகள் பரவிய காலகட்டத்தில், ஜேசன் சஞ்சய் தனது சமூக வலைதள பக்கத்தில் தந்தையைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் என்றும், தனது பெயருக்கு பின்னால் இருந்த தந்தையின் இனிஷியலான 'V' என்ற எழுத்தை நீக்கிவிட்டு தாயின் இனிஷியலான 'S' என்பதைச் சேர்த்துக் கொண்டார் என்றும் தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில், குறித்த காணொளியில் ஜேசன் சஞ்சயின் உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தந்தையைப் பற்றி சஞ்சய் மிகுந்த பாசத்துடனும், அலாதி அக்கறையுடனும் பேசியிருப்பது, அவர்கள் இருவருக்குள்ளும் எந்தப் பிரிவும் இல்லை என்பதையே காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அப்புடியே நம்ம அண்ணனை பார்ப்பது போலவே இருக்கு 🥹#JasonSanjay 👍 pic.twitter.com/5uPIOvFK57
— ♛ Hamitha˙⋆✮ (@HamithaThaslima) June 30, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |