கோடைக் காலம் வந்தாச்சு! பசலைக்கீரை அதிகம் சாப்பிடுங்க
நம் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கவேண்டுமெனில் சரிவிகித சத்துக்கள் கிடைக்க வேண்டும், அதாவது வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் கோடை காலம் தொடங்கிவிட்டதால் பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிட வேண்டும், பசலைக்கீரையில் நம் உடலின் பாதி பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய மருத்துவம் அடங்கியுள்ளது.
பசலையில் கொடிப்பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை, சிலோன் பசலை என பலவகை உள்ளன.
இதில் குத்துப்பசலை தாராளமாகக் கிடைக்கக்கூடியது. இதனை சிறுபசலை, பசறை என பல் வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.
இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது.
இதனை ஆயுர்வேதத்தில் அமிர்த வல்லாரை என்று அழைக்கிறார்கள். இதன் இலைகள் தடிமனாக முக்கோண வடிவில் இருக்கும்.
பசலைக்கீரையில் மூளை வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டுக்கும் தேவையான ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது.
பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
பயன்கள்
ஹீமோகுளோபினை அதிகரிக்கும்
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, இதை உணவில் சேர்த்து வரும் போது இரும்புச்சத்து குறைபாடு உண்டாவதை தடுக்கலாம், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும்.
புது ரத்தத்தை உற்பத்தியாக்கி உடலுக்கு பலம் தரக்கூடிய குத்துப் பசலையின் இலையை நன்றாகச் சிதைத்து பற்று போட்டால் கொப்புளம், கழலை, வீக்கம் சரியாகும்.
இளம் வயதில் தாறுமாறாக முடி கொட்டுகின்றதா?
புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
பசலைக் கீரையில் ஃப்ளேவோனாய்டு என்னும் அத்தியாவசிய பைட்டோ நிïட்ரி யண்ட்டுகள் இருக்கிறது.
மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
இதயத்தின் ஆரோக்கியம்
இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானம்!
வெள்ளைப்படுதல் சரியாகும்
பசலைக்கீரை சாப்பிடுவதால் மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு போன்றவை நீங்கும்.
வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ள பெண்கள் பசலைக்கீரையை தாராளமாக சாப்பிடலாம், மேலும் உடல் கழிவுகளை வெளியேற்றி வயிற்றுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றவும் உதவி செய்கிறது.
பாசிப்பருப்புடன் சேர்த்துச் சாப்பிட்டால் வெள்ளை, வெட்டை நோய்கள் சரியாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த கொடிப்பசலையை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.
சிறுநீர் கடுப்பு சரியாகும்
பசலைக்கீரையை பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் வெப்பம் நீங்கி நீர்ச்சுருக்கும், நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்றவற்றை குணப்படுத்தும்.
கீரையின் சாறு, முகப்பருக்களை நீக்கக்கூடியது. வெள்ளைப்பசலை சாப்பிடுவது சிறுநீர் பெருக்கத்தை அதிகரித்து உட்சூட்டை குறைக்கும்.
ஆசன வாய் பகுதியில் உண்டாகும் புண், எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்த செய்கிறது.
வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா?
குழந்தைகளுக்கு நல்லது
இதில் அதிகம் நிறைந்துள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகள் மற்றும் பற்களை வலிமைபடுத்துகிறது, வைட்டமின் கே எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்து எலும்புக்கு வலிமை அளிக்கிறது.
இதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த பசலைக்கீரையை குழம்பாகவோ, அல்லது சூப் போன்றோ ஜூஸாக்கியோ கொடுத்துவந்தால் எலும்பும், பற்களும் உறுதி பெறும்.
மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், வலியைக் குணப்படுத்தும்.
வேர்க்குரு பிரச்சனை சரியாக
பொதுவாக கோடை காலங்களில் பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று வேர்க்குரு, இதன் தண்டினை அரைத்து வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் வேர்க்குரு பிரச்சனை சரியாகும், அதனால் வரும் எரிச்சலும் குணமாகும்.
தீராத தலைவலியால் அவதிப்படும் நபர்கள் பசலைக்கீரையை கசக்கி சாறு பிழிந்து, அந்த சாற்றை தலை மற்றும் நெற்றியில் தடவிக்கொண்டால் தலைவலி சரியாகும்.
உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருதா? இந்த உணவுகள் கூட காரணமாக இருக்குமாம்
ஆரோக்கியமான நரம்பு மண்டலம்
பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.
இதில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.
தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க
கருவில் வளரும் குழந்தைக்குக் கால்சியம், இரும்பு சத்துகளும் கிடைப்பதினால் பிறக்கும் போது உடல் நலத்துடன், ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரியாகச் சுரக்கவில்லை என்றால் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தாய்பால் சுரக்கும்.
பெண்களை தீவிரமாக பாதிக்கும் Endometriosis! இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க
