பெரும் புகழ் பெற்ற நடிகை! எயிட்ஸ் நோயால் உயிரிழந்த சோகம்.. கடைசி காலத்தில் நடந்த துயரம்
ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்ற நடிகை கடைசி காலத்தில் சொல்ல முடியாத துயர்தால் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

35 வயதான நடிகையின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் உயிரிழந்து 15 நாட்களுக்குப் பிறகு தான் அவர் எதற்காக உயிரிழந்தார் என்ற காரணம் தெரிந்தது.
அந்த நடிகை வேறுயாரும் இல்லை. ஹாலிவுட்டில் சினிமாவில் 4 வயதில் நடிக்கத் தொடங்கியடேவி எலிசபெத் சேஸ் தான் அவர். 4 வயதிலேயே நடிப்பைத் தொடங்கிய இவர், 7 வயதில் Sabrina the Teenage Witch தொடரின் மூலம் பிரபலமானார். 2002ஆம் ஆண்டு வெளியான The Ring திரைப்படத்தில் சமாரா மோர்கன் கதாபாத்திரம் மூலம் உலகப் புகழ் பெற்றார். அந்த நடிப்பிற்காக 2003ஆம் ஆண்டு எம்டிவி திரைப்பட விருதையும் வென்றார். தொடர்ந்து வெற்றிகரமாக நடித்த அவர், 2016க்குப் பிறகு திடீரென நடிப்பிலிருந்து விலகினார்.

இதன் பின்னர் அடிக்கடி சர்ச்சைகள், போதைப்பொருள் வழக்குகள் போன்றவற்றில் சிக்க தொடங்கினார். இதன் பின்னர் வாழ்வின் இறுதி நாட்களில் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்த அவர் இருக்க வீடு கூட இல்லாமல் பெரும் கஷ்டத்தில் நின்றார்.
நடிகை எலிசபெத் சேஸ் தனது 13 வயதில் இருந்தே போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானார்.
அது அதீதமாகி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலவகை போதைப்பொருள் பயன்பாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது.
இதை பற்றி அவரது மேலாளர் கூறுகையில் எலிசபெத் சேஸுக்கு முதலில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அது பின்னர் செப்சிஸ் நோயாக முற்றியதாகவும், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால், மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மருத்துவப் பரிசோதகரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் நடிகை எலிசபெத் சேஸ் மரணத்திற்கான முக்கிய காரணம் எய்ட்ஸ் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |