தினமும் ஒரு துண்டு பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பூண்டு மிக முக்கியமான சக்திவாய்ந்த உணவு பொருளாகும்.
பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு,அயோடின், சல்ஃபர், குளோரின் புரதம் உள்ளிட்டவை நிறைந்திருக்கின்றன.
நீரிழிவு நோயாளி வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடலாமா? எச்சரிக்கை....!
100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0%, புரோட்டின் சத்து 6.3% கொழுப்பி 0.1% தாதுக்கள்1.0% நார்ச்சத்து 0.8% கார்போஹைட்ரேட்ஸ் 29.8% உள்ளது.
இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள்
தினமும் பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நச்சுக்களை வெளியேற்றும் - பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவும் - காலையில் எழுந்ததும் பூண்டு சாப்பிடுவது நல்ல செரிமானத்திற்கு உதவும். உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து எடையை குறைக்க உதவுகிறது. எனவே எடை அதிகமாக இருக்கும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாரடைப்பில் இருந்து தப்பிக்க வைக்கும் உணவுகள்! இனி இளம் வயது மரணமில்லை
நீரிழிவு நோயை தடுக்கும் - பச்சை பூண்டை உட்கொள்வது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது.
காசநோயை விரட்டியடிக்க உதவும் - காசநோய் போன்ற சுவாச பாதையில் ஏற்படும் சளித்தொல்லைக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். தினந்தோறும் பூண்டு சாப்பிடுவது காசநோய் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
ஆஸ்துமாவுக்கு தீர்வு - சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு பூண்டு சிறந்த தீர்வளிக்கிறது. தினமும் ஒரு டம்ளர் தண்ணீருடன் பூண்டை சேர்த்து சாப்பிடுவது சளி அபாயத்தை குறைக்க உதவும்.
இதய நோய்களை தடுக்கிறது - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்க பூண்டு உதவுகிறது. இதயக் குழாய்களில் கொழுபு்புகள் சேருவதைத் தடுக்கிறது. அதனால் மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் - பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் வெந்தயம்! இப்படி எடுத்து கொண்டால் போதும்
நீண்ட ஆயுளைத் தருகிறது - பூண்டு நம் உடலில் உள்ள சில முக்கியமான உடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உங்க ஆயுளை நீட்டிக்க உதவுகிறது. எனவே பூண்டை உணவில் சேர்த்து வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும்.
இரத்த அழுத்தத்தினை குறைக்கும் - உயர் இரத்த அழுத்த பிரச்னைக்கு சிறந்த தீர்வாக பூண்டுச்சாறு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உடல் சக்தியை மீட்டெடுக்கும் - உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும் போது உடல் சோர்வு, உடல் பலவீனம், மனச் சோர்வுக்கு உள்ளாகலாம். பூண்டில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் உடலுக்கு அதீத எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது.
இல்லற வாழ்க்கைக்கு உதவும் - தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்தவர்கள், ஆண்மைக் குறைபாட்டை ஆரம்ப நிலையில் கண்டறிந்த வர்கள், பூண்டை சாப்பிட்டு வந்தால் இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு உண்டாகும்.
தாய்ப்பாலை அதிகரிக்கும் - தாய்ப்பால் சுரக்க பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிடுவார்கள். இது பூண்டில் இருக்கும் சத்துகளை வெளி யேற்றிவிடும்.
உடல்பருமனைக் குறைக்கும் - உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் குணம் பூண்டுக்கு உண்டு. உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிட்டால் வயிறு தொப்பை குறைவதோடு கணிசமாக உடல் எடையும் குறையும். உடல் எடை குறைப்பில் பக்கவிளைவு இல்லாத எளிய வைத்தியம் இது என்றும் சொல்லலாம்.
குடல் புழுக்களை வெளியேற்றும் - உடல் நலன் ஆரோக்கியமாக இருக்க ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வயிற்றில் இருக்கும் பூச்சுகளை வெளி யேற்ற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கு மாத்திரைகளை விட துரிதமாக பக்கவிளைவின்றி வெளியேற்ற உதவுகிறது பூண்டு.
புற்றுநோயால் வரக்கூடிய புண்கள் - குணப்படுத்தும் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. புற்றுநோயால் வரக்கூடிய புண்களுக்கு மாத்தி ரைகள் சாப்பிடும் போது அதனுடன் ஒரு பூண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புண்கள் ஆறுவதைத் தூண்டும் சக்தியும் உண்டு.
கண்களில் புரை, வாயுக்கோளாறு, எலும்பு நோய், சைனஸ், வைரஸ் கிருமிகள், செரிமானக் கோளாறு, வயிற்றுக் கோளாறுகள் போன்ற அனைத்தும் வெறும் வயிற்றில் பூண்டு பற்களை மென்று உமிழ்நீர் கரைய சாப்பிட்டு வரும்போது கிடைக்கிறது.
பூண்டின் அதிகபட்ச நன்மைகளை பெற தினமும் அதை எப்படி சாப்பிடலாம்?
சிறந்த வழி
சில பூண்டு பற்களை 3-4 துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
நறுக்கி வைத்துள்ள பூண்டில் சில துளிகள் தேனை ஊற்றி இரண்டு நிமிடங்கள் ஊறவைக்கவும்.
இப்போது பூண்டை ஒழுங்காக மென்று சாப்பிடவும். பூண்டின் சுவை உங்களுக்கு சற்று அதிகமாகத் தெரிந்தால் வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம்.
பூண்டுடன் தேன்
நறுக்கிய 10 கிராம் பூண்டுகளை 5 தேக்கரண்டி தேனில் கலந்து அன்றாடம் சாப்பிடுவதற்கு சேமித்து வைக்கலாம்.
இந்த கலவையிலிருந்து தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்து சாப்பிடுங்கள்.
இந்த கலவையை காற்று புகாத பாட்டில் சேமித்து வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அது ஒரு வாரம் எளிதாக நீடிக்கும்.
எப்போது சாப்பிட வேண்டும்?
தேன் மற்றும் பூண்டு இந்த கலவையை பெற சிறந்த நேரம் காலைதான். எப்போதும் பூண்டுடன் தேனை சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஏனெனில் பூண்டு பச்சையாக சாப்பிடுவது அமிலத்தன்மையை ஏற்படுத்தும், ஆனால் தேனை பூண்டுடன் இணைப்பதால் அத்தகைய தீங்கு ஏற்படாது.
உண்மையில், தேன் மற்றும் பூண்டு வயிற்று நோய்த்தொற்றுகளை கையாள உதவுகிறது மற்றும் அவற்றை இயற்கையான முறையில் நடத்துகிறது.
பூண்டு ஒரு அற்புதமான ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், இது எடையை குறைக்கும் செயலுக்கு உதவுகிறது. தேன்-பூண்டு கலவையை காலையில் தவறாமல் உட்கொண்டு, அதிலிருந்து அதிக நன்மைகளைப் பெறுங்கள்.
எச்சரிக்கை
குடல் புண் இருப்பவர்கள் பச்சையாக பூண்டை மென்று சாப்பிடக்கூடாது.
வெறும் வயிற்றில் தினமும் 2 பூண்டு பற்களை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். ஒரே நாளில் நோயைக் கட்டுப்பத்துகிறேன் என்று அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடும் போது வேறு பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.
நாற்றம் நிறைந்த பச்சை பூண்டை தவிர்க்காவிட்டால் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை உணரலாம். ஒன்றில் ஆரோக்யம் உண்டு. அழகும் உண்டு. அதுதான் பூண்டு.